ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் திட்டம்...
ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடங்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், ஜூன் மாத இறுதிக்குள் இதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படும் என்றும்; அதே வேளையில், சிறார்களின் வயதைச் சரிபார்க்க தொழில்நுட்ப ரீதியாக நவீன முறைகள் கையாளப்படும் என்றும் அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் அதிகப்படியான செல்போன் பயன்படுத்தும் நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலைப்பாட்டில் உலகளவில் முதல் நாடாக ஆஸ்திரேலியா இருப்பதைத் தொடர்ந்து, இந்தோனேசியா, ஸ்பெயின் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இத்துடன், இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்ற தடைகளை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.