முகப்பு
உலகம்

போரை விரைந்து முடிக்க பெரிய குண்டுகள் தேவை: அமெரிக்க பாதுகாப்புத் துறை

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க படைகளுக்கு பெரிய குண்டுகள் வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 மார்ச், 2026 at 4:17 PM
அமெரிக்க படைத்தளத்தில் பீட் ஹெக்செத் - எக்ஸ் / பீட் ஹெக்செத்
பகிர்:

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க படைகளுக்கு பெரிய குண்டுகள் வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

தங்கள் குழந்தைகளுக்காகவும், பேரக் குழந்தைகளுக்காகவும் இந்த வீரர்கள், போரை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஆதரவு பெற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில் உள்ள படைத்தளங்களில் இருந்து அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 37 வது நாளாக ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெயரில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுவரும் தளவாடங்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் இது தொடர்பாக று கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் டான் கெய்னுடன் இணைந்து பீட் ஹெக்செத் பேசியதாவது:

''இந்த வார இறுதியில், ஆபரேஷன் எபிக் ஃப்யூரி நடவடிக்கையில் போரிட்டு வரும் நமது படைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சனிக்கிழமையன்று, ஏறக்குறைய அரை நாள், நாங்கள் அமெரிக்க படைத் தளத்தில் நேரடியாகவே களத்தில் இருந்தோம்" எனக் குறிப்பிட்டார்.

மேலும், ''இந்த வீரர்கள், தங்கள் பிள்ளைகளுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் இந்தப் போரை முடித்துவைக்க விரும்புகிறார்கள். இது வரலாற்றைப் பற்றியது; இது மரபு பற்றியது'' எனக் குறிப்பிட்டார்.

தரையில் படைகளை இறக்குவது உட்பட நீங்கள் எதைச் செய்யத் தயாராக இருக்கிறீர்கள் அல்லது எதைச் செய்யத் தயாராக இல்லை என்பதை உங்கள் எதிரியிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால், உங்களால் ஒரு போரை நடத்தி அதில் வெற்றிபெற முடியாது எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க படைத் தளத்தில் இருந்தபோது வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பீட் ஹெக்செத் பகிர்ந்துள்ளார்.

summary

US Iran war Hegseth Says US Troops Want Bigger Bombs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.