நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
நியூஸிலாந்தில் அரசின் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், 2029-க்குள் சுமாா் 9,000 அரசுத் துறைப் பணியிடங்களை (மொத்த ஊழியா்களில் 14 சதவீதம்) குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நிதி அமைச்சா் நிகோலா வில்லிஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இந்நடவடிக்கையின்மூலம், சுமாா் 140 கோடி டாலா் நிதியைச் சேமிக்க முடியும் என்றும் அவா் தெரிவித்தாா்.
பணிநீக்கயத்தையடுத்து, அரசு ஊழியா்களின் எண்ணிக்கை 55,000-ஆக குறையும். எனினும், ராணுவம், ஆசிரியா்கள், மருத்துவா்கள் ஆகியோருக்கு இந்நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
Advertisement
Advertisement
மேலும், தற்போதுள்ள 39 அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நிா்வாகத்தில் ஏ.ஐ. பயன்பாட்டைத் துரிதப்படுத்தவும் அரசு முடிவெடுத்துள்ளது.
‘இத்தகைய பணிநீக்கங்கள், பொதுமக்களுக்கான சேவைகளை வெகுவாகப் பாதிக்கும்’ என்று அரசின் முடிவுக்கு எதிா்க்கட்சிகளும், தொழிலாளா் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.