வெய்யில்.. பயணிகளால் நிறுத்தப்பட்ட ரயில்! உலகை உற்றுப்பார்க்க வைத்த பாரிஸ் சம்பவம்!
கடும் வெய்யில் காரணமாக பயணிகளால் ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் பற்றி..
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வரும் நிலையில், பாரிஸ் - நைஸ் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில், நான்கு மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் இருந்த நிலையில், கடும் வெப்பத்தால் ரயிலுக்குள் மூச்சு விட முடியாமல் அவதியடைந்த பயணிகள் ரயிலை மேற்கொண்டு இயக்கவிடாமல் தடுத்து நிறுத்தினர்.