முகப்பு
தமிழ்நாடு

கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? மழைக்கு வாய்ப்பு?

கடும் வெய்யில் வாட்டுவது குறித்து வானிலை நிபுணர்கள் தெரிவித்திருப்பதாவது,

Updated On : 3 ஏப்ரல் 2026, 12:42 pm IST
கடும் வெய்யில் - File photo
பகிர்:

சென்னை: காலை 7 மணிக்கெல்லாம் சூட்டெரிக்க வந்துவிடும் சூரியன், மாலை 5 மணியானாலும் ஓய்வெடுக்கச் செல்வதில்லை. இடையே 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெய்யில் கொளுத்துகிறது.

சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் வியாக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையாக 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது.

தரைக்காற்றின் வேகம் குறைந்திருப்பது மற்றும் கடல் நிறைந்த கிழக்கு திசையிலிருந்து தரைப்பகுதிக்கு வரும் காற்றின் வருகை தாமதமாவது போன்றவை, பகல் நேரத்தில் வெப்பத்தை அதிகரித்து வெள்ளிக்கிழமையும் சென்னையில் 36 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 33.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவாகியிருந்தது.

Advertisement

Advertisement

பகல் பொழுதில் கிழக்கு திசையிலிருந்து அல்லது கடற்பகுதியிலிருந்து வரும் காற்றின் நேரம்தான், தரைப்பகுதியின் வெப்பநிலைக்கு அடிப்படையாகிறது. கடற்காற்று தாமதமாக தரைப்பகுதிக்கு வருமானால் வெப்பநிலை கூடுகிறது. கடற்கரையை ஒட்டியிருக்கும் பகுதிகளைவிடவும், நகரப் பகுதியின் தரை வெப்பமானது அதிகமாக இருக்கும்போது, கடற்காற்று தரைப்பகுதிக்குள் வருவது தாமதமாகிறது. அதேவேளையில்மேற்கு திசைக் காற்று அதிக வெப்பமாகவும் வறண்டும் காணப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டுகிறது.

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் வெய்யில் இயல்பான வெப்ப அளவை விட அதிகமாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய கொங்கன் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், வானிலை குறித்து ஆய்வுகளை வெளியிட்டு வரும் தனியார் நிபுணர்கள், ஏப்ரல் 4ஆம் தேதிக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும், புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவைத் தொடும் என்றும் கூறப்படுகிறது.

summary

Meteorologists have reported that the scorching sun is causing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.