முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: அமெரிக்காவின் பலி எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது

அமெரிக்காவில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த் ற்றுக்கு 2,500 பேர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2020 at 9:17 AM
பகிர்:

நியூயார்க்:  அமெரிக்காவில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த் ற்றுக்கு 2,500 பேர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் 210 நாடுகள் வரை பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில், உலக அளவில் நோய்த்தொற்றுக்கு 20 லட்சத்து 83 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 616-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

Advertisement

பலி எண்ணிக்கையில், முதலிடத்தில் இருந்த இத்தாலியை அமெரிக்கா பின்னுக்கு தள்ளியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 28,529 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 2,500 பேர் பலியாகி உள்ளனர். 6,44,089 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 48,708 பேர் குணமடைந்துள்ளனர். 

இதேபோல், அதிகபட்சமாக இத்தாலியில் 21,645 பேரும், ஸ்பெயினில் 18,812    பேரும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.