மதுரை ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டில் மூதாட்டி ஒருவர் பலி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 71 வயதான மூதாட்டி ஒருவர் வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 71 வயதான மூதாட்டி ஒருவர் வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரையில் மார்ச் 25 -ஆம் தேதி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 54 வயது நபர் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அர்ச்சகரின் தாயார் 70 வயது மூதாட்டி கரோனா தொற்று ஏற்பட்டு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
அவரது உடல் உடனடியாக இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது . இதை அடுத்து மதுரையில் கரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் நோய்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.