கும்பம்
(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.
பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).
***
கும்பம் (AQUARIUS)
இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசி. காற்று ராசியும்கூட. இதற்கும் அதிபதி சனிதான். இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது. நீருடன் உள்ள கும்பம்தான் இதன் அடையாளம். இதன் குறியீடு K. இந்த ராசி கணுக்கால் மற்றும் உடல் நரம்புகளைக் குறிக்கிறது. நரம்பு சம்பந்தமான VERICOSE என்னும் நோய் வரக்கூடும். இந்த வீடு சுக்கிரனுக்கும் புதனுக்கும் நட்பு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருக்குப் பகை வீடு. இந்த ராசியானது மற்ற கிரகங்களின் கெட்ட பார்வை பட்டால், சோம்பேறித்தனம் பற்றிக்கொள்ளும். எப்போதும் கவலையுடனும், எதிர்மறை எண்ணங்களுடனும் இருப்பார்கள்.
டிசம்பர் 2
இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக பாக்கியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
டிசம்பர் 1 - 7
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். புதிய தொழில் செய்ய முனைவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் பணிகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகள் நண்பர்களுடன் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
விவசாயிகள் விளைச்சலில் உயர்வைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் விரும்பிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கலைத் துறையினர் பிறருக்கு அறிவுரை வழங்குவீர்கள். பெண்கள் குடும்பத்தாருடன் பாசமாக இருப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - டிச. 6, 7.
டிசம்பர் மாத பலன்கள்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
02-12-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-12-2023 அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-12-2023 அன்று சனி பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-12-2023 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-12-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சுபச்செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் முயற்சி சிரத்தை எடுப்பது நன்மை தரும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த தடங்கல்கள் அகலும். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.
குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.
பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அவிட்டம்:
இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.
சதயம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும்.
பூரட்டாதி:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.
பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
உங்களுக்கு இந்த ஆண்டு பொதுவாகத் தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.
குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கௌரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள். அன்றாடப் பணிகளுச்குக் இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சௌகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.
உத்தியோகத்தில் கெடுபிடி இருக்கலாம். மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அவசியமிருந்தாலன்றிப் பயணத்தை மேற் கொள்ள வேண்டாம். நன்மைகள் மிகுதியாக நடக்க வாய்ப்புண்டு. அவ்வப்போது சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரும். தொழிலில் சிறு சிக்கல் ஏற்படலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வீண் செலவுகள் உண் டாகலாம். பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் அடக்கமாக நடந்து கொண்டு அவப்பெயர் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பெரியோர் நல்லாசியைப் பெற்று வந்தால் நலம் விளையும். உடல் நலனில் அக்கறை இருக்கட்டும். முன்கோபம் காரணமாக சில நல்ல சந்தர்ப்பங்கள் பாழாகி விடுமாதலால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய கௌரவம் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு குடும்ப நலம், தாம்பத்யம் எல்லாம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் சிறிதளவு பயனும் ஏற்படலாம். பொருளாதார நிலையில் தான் அவ்வப்போது இக்கட்டு உண்டா கும். காரியங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் ஏற்படும்.
மாணவர்களுக்கு மதிப்பு கிட்டும். பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற இனங்களில் புதிய முயற்சி வேண்டாம். எனினும் உங்களுக்கான பாராட்டுகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சித்த சுத்தியோடு செய்யப்படும் நற்காரியங்களினால் பலன் ஏற்படும். புகழும் உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு உங்கள் பணிகள் பாதிக்கப்படாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் வீண் தொல்லைகளைத் தடுக்கலாம். தொழில் பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. தொழில் சிறக்கும். வியாபாரம் செழிக்கும். உங்களை வாழ வைக்கும் பொறுப்பை உங்களைச் சார்ந்த பெரியோர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்ப நலம், தாம்பத்தியம் எல்லாம் சீராக இருக்கும். தகுதி வாய்ந்தவர்களுகளுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம்.
சதயம்:
இந்த ஆண்டு உங்களுக்கு பெருந்தொல்லை ஏற்படாது. தொழில் சிறப்படையும். முதலாளி தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம். எனினும் மனம் தளர வேண்டாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமானாலும் அதற்காக மிகுந்த உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படலாம். எனினும் குடும்ப நலம் பாதிக்கப்படாது. விருந்தினர் வருகையும், விருந்தினராகச் செல்லக்கூடிய நிலையும் உண்டு. புத்திரர்களை முன்னிட்டுப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த ஆண்டு பெருந்தொல்லை உண்டாக இட மில்லை. மனதிற்கு இனிமை தரும் சில நன்மைகள் நடக்கும். உங்களுடைய அந்தஸ்து பாதிக்கப்படாது. முழுமுயற்சியுடன் செய்யப்படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் அவ்வளவு சௌகரியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் தடைப்படாது. கலைத்துறைப் பணிகள் சிறப்படையும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். அரசியல்வாதிகள் கௌரவிக்கப்படுவார்கள். ஆன்றோர் நல்லாசி கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.
எண் ஜோதிடம்:
பிறந்த தேதி பலன்கள்
-
1
பிறந்த தேதி
1, 10, 19, 28
என்றால்...
-
2
பிறந்த தேதி
2, 11, 20, 29
என்றால்...
-
3
பிறந்த தேதி
3, 12, 21, 30
என்றால்...
-
4
பிறந்த தேதி
4, 13, 22, 31
என்றால்...
-
5
பிறந்த தேதி
5, 14, 23
என்றால்...
-
6
பிறந்த தேதி
6, 15, 24
என்றால்...
-
7
பிறந்த தேதி
7, 16, 25
என்றால்...
-
8
பிறந்த தேதி
8, 17, 26
என்றால்...
-
9
பிறந்த தேதி
9, 18, 27
என்றால்...