மாந்தி தோஷம்! அகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடையும் பரிகாரங்கள்!
அகால மரணம், பிரேத சாபம் மற்றும் ஆன்மா சாந்திக்கான பரிகார ரகசியங்கள் பற்றி இக்கட்டுரையில்,

மாந்தி தோஷம்
விதியை முன்கூட்டியே சொல்லமுடியும்,
ஆனால் அதனை வெல்லமுடியாமல்
மதி மௌனமாகிவிடும்.
மௌனத்தை கலைப்பதே ஜோதிடரின் பணி. பிரபஞ்சத்தின் மொழி உணர ஜோதிடம் அவசியம்.
அகால மரணம் / மன வலியுடன் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய மாந்தி தோஷம் எனும் பிரேத சாப பரிகாரங்கள் செய்ய வேண்டியது அவசியம்.
மாந்தி தோஷம் (பிரேத சாபம்) பரிகாரங்கள்
ஒருவர் ஜாதகத்தில் மாந்தி அமர்ந்த இடத்தை வைத்து மாந்தி தோஷம் உள்ளதா என்பதை அறிய முடியும். இறந்தவர் கடைசி நேரம் பட்ட வலி மற்றும் அவரின் எதிர்பார்ப்புகள் இவற்றிற்கு முற்றுப்பெற வைத்துச் செய்யப்படும் பரிகாரங்களே மாந்தி தோஷ பரிகாரங்கள் ஆகும்.
இறந்தவரின் வயது, பாலினத்தைக் கொண்டு அறியாத நபர் ஒருவருக்கு, அவருக்குத் தேவையான வஸ்திரம், மூன்று வேளை உணவு மற்றும் சிறிய காணிக்கையை அளிக்கலாம். முக்கியமாக அவரை முடிந்தவரை மறுபடி பார்க்காமல் இருக்கக்கூடிய நபராக இருப்பது நல்லது. ஆம், பொதுவாக இதனை செய்பவரின் நல்ல நேரமாக இருப்பின் அப்படிப்பட்ட நபர் கண்ணில் தென்படுவார்.
இந்த பரிகாரத்தைச் செய்து முடித்த பின்னர், திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு கோயிலுக்குச் சென்று வரலாம். இங்குள்ள தல மரம் - ஆலமரம், பலா மரம், இக்கோயிலில் உள்ள தீர்த்தம் சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), முக்தி தீர்த்தம்.
சும்பன், நிசும்பர் என்ற இரு அரக்கர்கள் ஆலமரங்கள் நிறைந்த இந்தக் காட்டிலிருந்து கொண்டு தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு விளைவித்தனர். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிடவே, பார்வதி தேவி தன் மற்றொரு வடிவான காளி தேவியை இத்தலத்திற்கு அனுப்பினாள். இவ்வாலங்காட்டிற்கு வந்த காளியும் அரக்கர்களை அழித்து அவர்கள் இரத்தத்தை உண்ட காளி பல கோரச் செயல்களைப் புரிந்தவாறு இக்காட்டிற்குத் தலைவியாக விளங்கினாள்.
முஞ்சிகேச கார்க்கோடக முனிவர் சிவனிடம் முறையிடவே, சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டையடைந்தார். காளி சிவனிடம், நீ என்னுடன் நடனமாடி வென்றால் இக்காட்டை ஆளலாம் என்றாள். போட்டி நடனம் தொடங்கியது. சிவபெருமான் ஒற்றைக்காலை மேலேத்தூக்கி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார். அதனை ஒரு பெண்ணாகவிருந்து செய்யவியலாத காளி தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார். இறைவனும் முன்தோன்றி உன்னை வணங்கி பின் என்னை அடைவார்கள் என அருள்பாலிக்கிறார். எனவே இங்கு காளி கோயில் தனித்து விளங்குகிறது.
முதலில் பிரதான கோயிலின் வெளியே தனியாக அமைந்துள்ள "காளி கோயில்" சென்று வணங்கி , இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்து "எங்கள் குடும்பத்திற்கு அனைத்து நன்மையையும் செய்திட வேண்டும்" என பிரார்த்தித்து பின்னர் கோயில் அருகில் உள்ள குளத்து நீரை எடுத்து தலையில் தெளித்து பின்னர் வடாரண்யேசுவரர் திருக்கோயிலினுள் நுழைந்து பிரகாரத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள மாந்தீஸ்வரருக்கு மாந்தியால் பாதிக்கப்பட்டோரின் ( ஜாதகரின்) கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயர் சொல்லி அர்ச்சித்து வருதல் அவசியம்.
இது ஒரு முறை செய்தால் போதுமானது. இதனை சனிக்கிழமைகளில் தான் செய்திடல் வேண்டும். இதனை ஒரு பெரிய செலவாகக் கருதாமல் அப்படி அகால மரணம் / மன வலியுடன் இறந்தவரின் ஆன்மா சாந்தியடையவும் நம் மனதில் முழு திருப்தி ஏற்படவும் இந்த பரிகாரம் துணை நிற்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி நிற்கும் இடங்களைக் கொண்டு அவ்வாறு இறந்தவர் யார் என அறிதல் முடியும். சிலருக்கு முன்னர் நடந்த விஷயம் தெரியாது என்றாலும் அவர்கள் பலரிடம் கேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிந்துள்ளனர். அதற்கேற்ப பரிகாரம் செய்து நல்லது நடைபெற்றிருக்கிறது. இதனை திதி சூன்யத்தால் கண்டு அறிய முடியும். அது நிற்கும் பாவத்திற்கு ஏற்படும் பிரச்னைகளை களையவும் இந்த பரிகாரம் செய்யலாம்.
முடிந்தவரை மாந்தி தோஷ அனைத்து பரிகாரங்களையும் தேய்பிறையில் செய்தல் நன்று...
பொதுவாக இந்த மாந்தி தோஷம் செய்தொழில் / வேலையில் தடை மற்றும் சிக்கல்கள் தோற்றுவிக்கும். மேலும், சிலருக்கு திருமணத் தடை போன்றவை ஏற்படும். குழந்தை பிறப்பதைத் தடுப்பதும், பிறந்த குழந்தைகள் பெற்றோரை தள்ளி வசிப்பதும் இந்த தோஷத்தால் ஏற்படும்.
ஒருவர் மற்றவரிடம் கொள்ளும் கோபமே நாளடைவில் அதிகரிக்கும்போது தோஷமாகிறது. இந்த தோஷம் பலரின் மூலம் அதிகமானால் சாபம் ஆகிறது. தோஷத்தைச் சரிசெய்துவிடலாம். ஆனால், சாபத்தை அனுபவித்துத் தான் கழிக்கவேண்டும். இறை நம்பிக்கையோடும் மற்றவர் மேல் கொள்ளும் அனுதாபத்தோடும் மேற்படி சாபத்தைக் குறைக்கலாம்.

மேற்சொன்ன பாவங்கள் குறி காட்டும் உறவுகள் ஓரளவே...
ஒருவரின் ஜாதகத்தில் மேற்சொன்ன பாவங்களில் மாந்தி அமர்ந்திருந்தால் ஜாதகர் பிறப்புக்கு முன்னரே அந்த உறவுகள் யாரோ அவர் தாம் இறக்கும் தருவாயில் மன வலியுடனோ / அகால மரணம் அடைந்திருக்கக்கூடும் என அறியலாம்.
ஜாதகர் பிறப்புக்குப் பின்னர் இருப்பாரே ஆயின் அவர் ஜாதகர் மேல் அளவுகடந்த பாசம் அன்பு வைத்து பின்னர் அது தடைப்பட்டதாகவோ இருக்க வாய்ப்பு. அப்படிப்பட்ட நபரைக் கண்டு அவருக்குரிய பரிகாரம் செய்து தமது வாழ்நாளில் எந்த ஒரு தடையும் இன்றி நல்லபடியாக வாழலாம்.
தொடர்புக்கு : 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


