கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நியூட்டன் படத்துக்கு ரூ. 1 கோடி உதவித்தொகை!

இந்த வருடம் முதல் ஆஸ்கருக்குத் தேர்வாகும் படத்துக்கு ரூ. 1 கோடி உதவித்தொகை வழங்கப்படுவதாக..

News image
Updated On :23 செப்டம்பர் 2017, 9:56 am

எழில்

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியாவிலிருந்து 'நியூட்டன்' என்ற ஹிந்தி திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியூட்டன், இந்திய அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சிறந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் அனுப்பி வைக்கப்படும். அந்தத் திரைப்படங்களை ஆஸ்கர் குழுவினர் ஆராய்ந்து, அவற்றை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், ஹிந்தி இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு (ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) அனுப்பி வைத்துள்ளது.

ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்காக இந்தியத் திரைப்படக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட 26 திரைப்படங்களுள் நியூட்டன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலர் சுப்ரான் சென் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வருடம் முதல் ஆஸ்கருக்குத் தேர்வாகும் படத்துக்கு ரூ. 1 கோடி உதவித்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வருடம் தேர்வான நியூட்டன் படம் ரூ. 1 கோடி பெறவுள்ளது. அர்த்தமுள்ள, நல்ல படங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாக தேர்வுக்குழுத் தலைவர் சி.வி. ரெட்டி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.