கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அனுஷ்காவின் பிறந்தநாளில் வெளியான புதிய பட அறிவிப்பு!

நடிகை அனுஷ்கா நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :7 நவம்பர் 2022, 1:07 pm

DIN


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜனிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அவரை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. 

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். அதற்கான போஸ்டரை யுவி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இது அவரது 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நிவின் பாலிஷெட்டி இணைந்து நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சமையல் கலைஞராக இருக்கும் படம் வெளியாகியுள்ளது. அதிக நாட்கள் ஆனாலும் இன்னும் அதேபோல் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Story image

“பிறந்தநாள் வாழ்த்துகள் அழகான நடிகை அனுஷ்கா ஷெட்டி” என யுவி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.  'அன்விதா ரவளி ஷெட்டி' எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.