பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

குறைந்தது டிஆர்பி! 5ஆம் இடத்துக்குச் சென்ற எதிர்நீச்சல் தொடர்!!

நடிகர் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு எதிர்நீச்சல் தொடரின் மீது பலருக்கு அதிருப்தியே நிலவுகிறது என்பதை இந்தப் பின்னடைவு சுட்டிக்காட்டுகிறது.

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர், டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், 
தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நடிகர் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு எதிர்நீச்சல் தொடரின் மீது பலருக்கு அதிருப்தியே நிலவுகிறது என்பதை இந்தப் பின்னடைவு சுட்டிக்காட்டுகிறது.

ஆதி குணசேகரனாக நடித்துவரும் வேல ராமமூர்த்தியின் நடிப்பும் மாரிமுத்து அளவுக்கு ரசிகர்களைக் கவரத் தவறியதே எதிர்நீச்சல் தொடரின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடருக்கு அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்  ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. 

அவரின் மறைவுக்குப் பிறகு அப்பாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். அவரின் நடிப்பு ஆக்ரோஷமானதாக இருந்தாலும், மாரிமுத்துவிடம் இருந்த நக்கலும் நையாண்டியும் துளியும் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 

Story image

மாரிமுத்து மறைவுக்குப் பிறகு எதிர்நீச்சல் மீது ஆர்வமிழந்த ரசிகர்கள், வேல ராமமூர்த்தி அப்பாத்திரத்தில் எப்படி நடிக்கிறார் என்ற ஆர்வமிகுதியைக் கொண்டிருந்தனர். அதனால், வேல ராமமூர்த்தி வந்தபிறகு சில வாரங்களுக்கு முதலிடத்தில் எதிர்நீச்சல் தொடர் இருந்தது. 

எனினும் படிப்படியாக தற்போது எதிர்நீச்சல் தனது முதலிடத்தை இழந்து தற்போது டிஆர்பி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் 9.55 புள்ளிகளை மட்டுமே எதிர்நீச்சல் தொடர் பெற்றிருந்தது. 

Story image

வானத்தைப்போல தொடர் டிஆர்பி பட்டியலில் 10.40 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் கயல் 10.14 புள்ளிகள், 3வது இடத்தில் சுந்தரி தொடர் 9.75 புள்ளிகள், 4வது இடத்தில் சிங்கப்பெண்ணே 9.62 புள்ளிகள் பெற்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.