முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

அதிக தொகைக்கு விற்பனையான அமரன் ஓடிடி உரிமம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் ஓடிடி உரிமை அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

DOTCOM

Published On :

சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த்.வி என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமரன் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.60 கோடி கொடுத்துப் பெற்றதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.