Enable Javscript for better performance
Importance of Modi's Fit India- Dinamani

சுடச்சுட

  

  மோடியின் ஃபிட் இந்தியா.. இந்தியர்களின் உயிர் நாடி! ஏன்? எதற்கு?!

  By டாக்டர் பி.ஆர். சுபாஷ்சந்திரன்  பிஎச்டி   |   Published on : 01st November 2019 02:54 PM  |   அ+அ அ-   |    |  

  fit_india1

   

   

   

  இந்தியாவின் நீண்டநாள் தேவையான உடல்தகுதி இந்தியா (ஃபிட்- இந்தியா) திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள். இதை நாம் முன்னதாகவே செய்து, முதல் உலக நாடுகள் பட்டியலில் நுழைந்திருக்கலாம்.

  இந்த துடிப்பான செய்தியை வரவேற்கும் அதே நேரத்தில், களயதார்த்தத்தை ஆய்வு செய்வதும் அவசியம்.  கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியர்களுக்கான திட்டமாக இது இருக்கும் என்றால், ஃபிட் இந்தியாவின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வுசெய்வது முக்கியம்.

  நாம் எங்கு, ஏன், உடல்தகுதியில் பின்தங்குகிறோம்?  

  இந்திய மனநிலையே இதற்குக் காரணம். நாம் உணவு, உடை, உறைவிடம் மற்றும் அரசு அளிக்கும் இலவசங்களை எளிதாக எடுத்துக்கொண்டு, சாதகமான அமைப்பில் வசதியான மூளையை எடுத்துக்கொள்கிறோம். இப்போது அறிவுசார்ந்த பொருளாதாரம், மேலும் படைப்பூக்கம் மற்றும் சீர்திருத்தங்களை கோருகிறது. பட்டப்படிப்பு உயர்வாகக் கருதப்பட்ட பாரம்பரிய மனிதவள அமைப்பு மாறிவரும் சூழ்நிலையில் பொருந்தாது. இரண்டாவதாக, நமது எண்ணங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் அமைப்பு உலகத்தரத்தில் இல்லை. 

  பள்ளிகள் கடந்தகாலத்தில் 10 - 15 ஏக்கர் நிலம் கொண்டிருந்தன. இப்போது மெல்ல சிலநூறு சதுர அடிகளாக சுருங்கி, அடுக்குமாடிக்குடியிருப்பு போன்ற நிலைக்கு வந்துவிட்டன. நம் நகரங்களில் பெரும்பாலான, யூ.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் மழலையர் பள்ளிகள் இதுபோன்ற அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செயல்படுவதைக் காணலாம். இது என்ன அநியாயம்? அடுக்குமாடிக் குடியிருப்புகள் கல்வி மையங்களாக மாறியுள்ளன. விளைவாக, தொடக்கப்பள்ளிகளில் உடல்தகுதி பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. 

  மைதானம் உள்ள ஒருசில கிராமப்புறப் பள்ளிகளே விதிவிலக்கு. ஆனால், பிள்ளைகள் ஆங்கிலம் பேசும் வல்லுனர்களாக இருக்க விரும்பி பெற்றோர்கள் அவர்களை நகரப்பள்ளிகளில் பயிற்றுவிக்க விரும்புகின்றனர். இதுபோன்ற வர்த்தகப்பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தால், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலான பள்ளிகள், உடல்தகுதி செயல்பாடுகளில் சொற்பஇடமே உள்ள நிலையில் குடியிருப்பு அல்லது கட்டிடங்களில் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கும். இந்த நிலையில், ஃபிட் இந்தியா திட்டத்தின் மொத்த நோக்கமும் தோல்வியடைகிறது. 

  இந்தியா ஆரோக்கியமான தேசமா? 

  ஒலிம்பிக் போட்டி அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாம் எத்தனை பதக்கங்களை வென்றிருக்கிறோம்? ஒரு தேசத்தின் ஆரோக்கியத்தை அது வெல்லும் தங்கப்பதக்கங்களில் இருந்து நாம் அளவிடலாம். சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாம் பெற்றுள்ள 107 தங்கப் பதக்கங்கள் போதுமா? இது பரிதாபம் இல்லையா? 

  2017ல் 119 எனும் நிலையில் இருந்து இந்தியா 120 ம் இடத்திற்கு, தோல்வியடைந்த இரு நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அருகே சரிந்தது. நாம் உடல்தகுதி அமைப்பைக்கொண்டிருந்தால், இந்தியாவின் செயல்திறன் மற்றும் திறமை மேம்பட்டிருக்கும். 

  சீனாவைப் பாருங்கள். சீனாவில் தொந்திவயிறு உள்ள குழந்தையைப் பார்ப்பது அரிது. அண்மையில் சீனா சென்றிருந்தபோது, என்னால் தொப்பை உள்ள ஒருவரைக் கூட பார்க்கமுடியவில்லை.  வியப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்னால். எப்படியும் ஒருவரையாவது பார்த்துவிடவேண்டும் என்று நகரைச் சுற்றிவந்தேன். இறுதியாக ஒருவரைப் பார்த்தேன். அவரை வேகமாக நெருங்கிச் சென்று என் வியப்பை வெளிப்படுத்தினேன். எனக்கு மூச்சிறைத்தது. அவரும் வியப்படைந்து, நான் ஏன் இத்தனை ஆச்சர்யமாக உணர்கிறேன் எனக் கேட்டார். 

  பெரிய தேடலுக்குப் பின், சீனாவில் தொப்பை உள்ள ஒருவரைக் கண்டுபிடித்த எனது தேடலையும், யுரேகா கணத்தையும் கூறினேன். என் தந்தை இந்தியர், தாய் சீனர் என அவர் பதில் அளித்தார். இந்த பதில் என மொத்த மகிழ்ச்சியையும் குலைத்தது. 

  சீனாவில் எல்லா இடங்களிலும் சைக்கிள் ஓட்டிகளைப் பார்க்கலாம். தனது மக்கள் சைக்கிள் ஓட்டுவதை சீன அரசு ஊக்குவிக்கிறது. நாமும் ஏன் இவ்வாறு செய்யக்கூடாது? உடல்தகுதி இந்தியா வெறும் கோஷமாக இல்லாமல், அது நிஜமாவதற்கான மேடையை முதலில் உருவாக்க வேண்டும்.  

  இதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். நம்முடைய இளைஞர்கள், தடகளத்தில் சீனா, ஜப்பான், ரஷ்ய, ஜெர்மனி மற்றும் அமெரிக்கர்களுடன் போட்டியிடும் அளவுக்கு உடல் தகுதியுடன் இல்லை. இந்திய இளைஞர்கள் மனநலப்பயிற்சி அளிக்கப்படாத நிலையில், போதிய போட்டித்தன்மை பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில், உடல்தகுதி இந்தியா எப்படி வெற்றிபெறும்?

  உடல்பயிற்சியை ஊக்குவிப்பதில் அரசின் பங்கு பாடத்திட்டத்தில் மற்ற பாடங்களுக்கு இணையாக உடல் பயிற்சியும் முக்கிய கற்றல் நோக்கமாக இடம்பெற வேண்டும். ஆசிரியர்களுக்கும் விளையாட்டு, விவாதம், காரணம் ஆராய்தல் மற்றும் சிந்திப்பதற்கான பல்வேறு கல்வித் தூண்டுதலை அளிக்கிறது.

  உலக சுகாதார அமைப்பு (WHO) பள்ளியில் உடல் பயிற்சியில் கவனம் செலுத்துவது, குழந்தைகளின் மேம்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பட்ட கல்விப் பயன்களை அளிப்பதாக வாதிடுகிறது.

  இங்கிலாந்து பொதுசுகாதாரம் அமைப்பின் தகவல்படி, உடல்பயிற்சி கீழ்க்கண்ட பலன்களை அளிக்கிறது. 

   

  • மேம்பட்ட கார்டியோ உடலியக்க ஆரோக்கியம்  
  • தசை வலு 
  • கார்டியோ சுவாச உடல்தகுதி 
  • சுயநம்பிக்கை மற்றும் குறைவான கவலை, மன அழுத்தம் உள்ளிட்ட மேம்பட்ட மனநலம்.
  • தன்னம்பிக்கை அதிகரிப்பு மற்றும் சகாக்கள் ஏற்பு  
  • அதிகரிக்கும் கவனிப்புத்திறன் 

  ஆக, ஆய்வுகள் நாம் உடல்தகுதி திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்த்துகின்றன. எனவே, நம்முடைய மக்கள் உடல்தகுதியுடன் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாக வேண்டும்.
  ஏற்கச்செய்வதைக் காட்டிலும் முதன்மையானது 
  உடல்தகுதி இந்தியா திட்டத்தை முன்னிறுத்துவதும்.. மற்றும் தவிர்க்கஇயலாததாகச் செய்வதுமாகும். அதற்கு அடுத்தபடியாக இனி, தீர்வு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும் தொடங்க வேண்டும். 

  உடற்பயிற்சி கட்டாயம் 

  கூகுள், டியோலைட், அக்ஸஞ்சர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உடல் பயிற்சியில் ஈடுபட விரும்பும் ஊழியர்களுக்காக சிறிய பயிற்சிக்கூடங்களை கொண்டுள்ளன. இந்திய நிறுவனங்களில் இத்தகைய நிலை உள்ளதா? பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இது பற்றி கவலைப்படுவதில்லை. வர்த்தக பணிகளில், விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை ஊக்குவிக்கவேண்டும். எந்தவிதமான பணிக்குமான தேர்வு தகுதிகளில் ஒன்றாக பி.எம்.ஐ எனப்படும் உடல்நிறை அட்டவணையை வைக்க வேண்டும். குறிப்பாக டாக்டர்கள் இதற்கான முன்னுதாரணமாக திகழவேண்டும். 

  வீட்டில் இருந்து துவக்கம் 

  உடல்தகுதி இந்தியா இல்லங்களில் துவங்கி, பள்ளிகளுக்கு விரிவடைய வேண்டும். குழந்தை வளர்ப்பின் ஒரு அங்கமாக உடல்தகுதி இந்தியா இல்லங்களில் இருந்து துவங்கவேண்டும். எனவே, பிள்ளைகள் உடல் பயிற்சியை தினசரி மேற்கொள்ள பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும்.  படிகளில் ஏறி இறங்குவது, சூரிய ஒளியில், மழையில் நடந்துசெல்வதை ஊக்குவிப்பது, சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது விளையாட்டுப் பொருட்களை பரிசளிப்பது போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும். ”நீங்கள் பயன்படுத்தப்படாவிட்டல் பிரகாசிக்கமுடியாது, அப்போது நீங்கள் துருப்பிடித்து வீணாகிவிடுவீர்கள்” என்று ‘பிஹைண்ட் தி ஹாஸ்பிட்டல்’ புத்தக ஆசிரியர் Phindiwe Nkosi  தெரிவித்துள்ளார். 

  எத்தனைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடற்பயிற்சிக்கூடங்கள் கொண்டுள்ளன? மேற்கத்திய நாடுகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தங்கள் கற்றல் அமைப்பின் ஒரு பகுதியாக, உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், ஸ்டீம்பாத் ஆகியவற்றைக் கொண்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் எத்தனை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றைக் கொண்டுள்ளன. ஒருசில வர்த்தகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் தவிர, நம் கல்வி நிலையங்களில் உடற்பயிற்சி மையங்கள் பற்றிய குறிப்பு இல்லை. 

  தகுதியில்லாத பள்ளிகளுக்கு அனுமதி வேண்டாம் 

  விளையாட்டுத் திடல் இல்லாத பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது. உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் பாடத்திட்டத்தில் முக்கிய அங்கமாக இடம்பெற வேண்டும். ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இத்தகைய ஆசிரியரை நியமிப்பதில்லை என்பதே பரிதாபம். கல்வி அதிகாரிகள், பரிசோதிக்கச் சென்று, தவறிழைக்கும் பள்ளிகளை தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்திருப்பார்கள். விளைவாக, உடற்பயிற்சியை ஊக்குவிக்க சொற்ப உள்கட்டமைப்பு கொண்ட அதிக பள்ளிகள் நம்மிடையே உள்ளன.

  மைதானம் இல்லாத பள்ளிகளின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். இல்லையெனில், குழந்தைகள் விளையாட போதிய வசதியை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மைதான வசதியற்ற பள்ளிகள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் செலவில் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று உடற்பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவைக்கவேண்டும். (பிள்ளைகளும், பெற்றோர்களும், இப்படி விலகியிருப்பதை விரும்புவார்கள்). மாற்றாக, கல்வி நிறுவனங்கள் உள்ளூர் உடற்பயிற்சிக்கூடங்களுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உடற்பயிற்சி வசதியில்லாத நிலையில் இந்த மையங்களில் கட்டணம் செலுத்தி அந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  உடற்பயிற்சிக்கு மதிப்பெண் 

  உடற்பயிற்சி பாடத்திட்டங்கள் அங்கமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள் தங்கள் கிரேடில் 10, 20 மதிப்பெண் கூடுதலாகப் பெற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் உள்ளதுபோல உடற்பயிற்சி பாடத்திட்டத்தில் இடம்பெறாத வரை நாம் தோல்வியடைவோம். மேற்கத்திய கல்வி நிறுவனங்கள், கல்வியைவிட உடல்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. பல ஆண்டுகளாக, வேலைக்குத் தகுதி இல்லாமல், மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கும் கற்றல்முறையை நாம் ஊக்குவித்து வருகிறோம்.
   
  உடற்பயிற்சிக்குக் குறைவான நேரம் 

  ஆரோக்கியமான மனதும், உடலும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவானது. பிள்ளைகள் தினமும் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி சார்ந்த செயல்பாட்டில் ஈடுபடுவதை உறுதி செய்யவேண்டும்.  கல்வி சிறப்பு, படைப்பூக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறுபட்டு சிந்திப்பது ஆகியவை ஆரோக்கியமான உடலுடன் தொடர்புடையவை. ஒரு நல்ல விளையாட்டு வீரர், அதிக மதிப்பெண் பெறாமல் இருக்கலாம். ஆனால், தசை வலுகொண்ட உடல் அமைப்பை அவர்கள் பெற்றிருப்பதை நினைவில்கொள்ள வேண்டும். மேலும், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமான மனத்தைக் கொண்டிருப்பது நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும். 

  உடல்தகுதி வசதிகள் 

  அரசிடம் போதிய வளங்கள் இல்லாததால், உடற்பயிற்சி கட்டமைப்பை உருவாக்குவதில் தனியார்களை ஊக்குவிக்க வேண்டும். இதற்குப் பதிலாக உடல் தகுதி உடையவர்கள் நமக்குக் கிடைப்பார்கள். இந்த மாற்றங்களை இப்போதே அமைப்பில் செயல்படுத்த வேண்டும். 

  மேலும் என்ன?

  1. உடற்பயிற்சிக்கூட கலாச்சாரத்தை பிரபலமாக்க வேண்டும். இந்தக் கூடங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். உடற்தகுதி இந்தியர்களை உருவாக்குவதற்காக, உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க முன்வருபவர்களுக்கு ஜிஎஸ்.டி விலக்கு கொண்ட வரிச்சலுகை அளிக்கவேண்டும். அதன் பிறகு சூழல், பிள்ளைகள் உள்ளிட்ட பொதுமக்களை உடற் பயிற்சிக்கு ஊக்குவிக்கும். 
  2. உடல் தகுதி செயல்பாடுகளுக்கு ஏற்ப மதிப்பெண் அளிக்கவேண்டும். 
  3. விளையாட்டு ஊக்க உபகரணங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரிக்குறைப்பு அளிக்கவேண்டும். 
  4. வீடுகளில் பெற்றோர்கள் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். பிள்ளைகள் காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள பெற்றோர்கள் முன்னுதாரணமாக செயல்படவேண்டும். பெற்றோர்கள் உடற்பயிற்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.  
  5. வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், பணியிடங்களில் யோகாவை ஊக்குவிக்கவேண்டும்.
  6. பள்ளிகள் உள்ளூர் உடற்பயிற்சிக்கூடங்களுடன் கூட்டுவைக்க ஊக்குவிக்க வேண்டும்.

  அரசு – தனியார் கூட்டு 

  அரசு- தனியார் கூட்டு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும். சச்சின், நேஹா மற்றும் சிந்து போன்றவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றனர். ஆனால் தங்கப்பதக்கம் வாங்குபவர்கள் உருவாகவில்லை. இந்த நிதியில் ஒருபகுதியை பள்ளிகளில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் செலவிட்டிருந்தால், மேலும் அதிக தங்கப்பத்தகம் வெல்லக்கூடிய உடல்தகுதி ொகண்ட இந்தியர்களை உருவாக்கியிருக்கலாம். 

  விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் 

  சேர்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு உரிய மதிப்பு கிடைக்கவேண்டும். நரம்பியல் கோளாறுகளுக்காக சிகிச்சைபெறும் 5 முதல் 10 சதவீத இந்தியர்கள் சைக்கோகோமேட்டிக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் ஆரோக்கியத்தின் கவலையளிக்கும் நிலை.  
  இந்தியாவில், 1.9 பில்லியன் பேர் அதிக பருமன் கொண்டுள்ளனர், 650 மில்லியன் பேர் மிகை உடல்பருமன் மிக்கவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 98 மில்லியன் பேர், 2030 ல் டைப் 2 நீரிழிவு பாதிப்பு கொண்டிருப்பார்கள். இந்தியாவில் 1990ல் இருந்து 2016ல் இதயநோய் மற்றும் பக்கவாத பாதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. எனது தேசமே கலவைகொள்!
  தகவல்களும் புள்ளிவிபரங்களும் நம் தேசம் எத்தனை உடல்தகுதி இல்லாத நிலையில் உள்ளது என்பது உணர்த்துகின்றன. புதிய இந்தியா உருவாக வழிவகுக்கும் உடல்தகுதி இந்தியாவை உருவாக்கிவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது.  

  உடல்தகுதியும், ஊட்டச்சத்தும் 

  2019 ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றபோது நாம் உற்சாகம் கொண்டோம். எனினும் பாகிஸ்தானியர்களை நிரந்தரமாக வீழ்த்தக்கூடிய உடல் தகுதி இந்தியர்களை உருவாக்காமல் நாம் மகிழ்ச்சி கொள்வது எப்படி? உடல்தகுதி கலாச்சாரத்தில் நாம் ஏன் பாகிஸ்தானை நிரந்தரமாக வீழ்த்தக்கூடாது?  

  நம்மால் இதை செய்யமுடியும். ஒருபக்கம் பள்ளிகள், வீடுகள், பணியிடங்கள் என அனைத்துத்தரப்பினரும் உடல் பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டும். பள்ளிகளில் விளையாடும் இடத்தை அதிகமாக்க வேண்டும். அதே நேரத்தில், டானிக், தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகளை இளம் இந்தியர்களுக்கு, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறும் வகையில் கர்ப்பினிகளுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க அரசு போதிய ஆதரவு அளிக்கவேண்டும்.

  தூய்மை இந்தியா மற்றும் தண்ணீர் திட்டங்களோடு உடல் தகுதி இந்தியா திட்டம் இணைந்து செயல்படலாம்.  

  முடிவும் சவால்களும் 

  பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை பார்த்திருக்கிறேன். அவை போதிய உடல் தகுதி ஆசிரியர்கள் கொண்டுள்ளன. குறைவாக உட்காந்து, அதிகம் இயங்குவது என்பதே கொள்கையாக இருக்கிறது. நாமும் இதில் இருந்து கற்கவேண்டும்.  

  இந்திய பொதுமக்கள் சோம்பல்மிக்கவர்கள். பிரதமரின் திட்டம், இந்திய மக்களை உடல் தகுதி பெற வைத்து, ஜெர்மனி மற்றும் ஜப்பானிய மக்கள்போல கடினமாக உழைக்கவைக்கும். நம்முடைய பொருளாதார மந்தநிலை மறைந்துவிடும். பல இடங்களில் தூய்மை இந்தியா மறக்கப்பட்டு விட்டது. உடல்தகுதி இந்தியா திட்டத்திற்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்பது என் விருப்பம். நம்மை உலக அளவில் போட்டியிடவைக்கும் உடல் தகுதி இந்தியா நோக்கி முன்னேறுவோம்.

  கட்டுரையாளர் பற்றி : டாக்டர்.பி.ஆர்.சுபாஷ்சந்திரன், ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்னார்வப் பேச்சாளர்.

  *கல்வி நிறுவனங்களில் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க அரசின் தலையீட்டை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டுரையாளர் பொது நலன் நோக்கிலான மனுத்தாக்கல் செய்துள்ளார்.  
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp