பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இன்றைய மருத்துவ சிந்தனை அரைக் கீரை

அரைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டு வந்தால்

Published On :

அரைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை குணமாகும்.

அரைக்கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகுப் பிரச்சனைகள் நீங்கி முடி நன்றாக வளரும்.

அரைக்கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, அதில் தினமும் ஐந்து சிட்டிகை அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

அரைக்கீரையை சிறு பருப்பு சேர்த்து, தொடரந்து 21 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்த சோகை மறையும்.

அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து, சாற்றை வடித்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

அரைக்கீரையுடன் சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர் காய்ச்சல், ஜன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

அரைக் கீரை தண்டுணன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேராத்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் சளி, இருமல், நுரையீரல் தொடர்பான கப நோய்கள் குணமாகும்.

அரைக் கீரையுடன் பாசிப் பயிறு, மிளகு, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.