விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

8.19 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

News image
Updated On :17 மே 2020, 9:09 am

DIN


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பி.பி.இ உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சோதனை ஆய்வகங்கள் மற்றும் கருவிகளுக்காக ரூ. 15,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புலம்பெயர் தொழிலாளர்கள் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு வழங்கியது. எஞ்சிய 15% தொகையை மாநில அரசுகள் வழங்கின.

20 கோடி ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ. 10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 3,950 கோடி மற்றும் 6.81 கோடி மக்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 12 லட்சம் பி.எப் தொழிலாளர்களுக்கு அரசு பணம் செலுத்தியுள்ளது. 

8.19 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ. 2,000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.