மசோதா நிறைவேற்றம், சட்டம், போராட்டம்.. இன்று ரத்து: வேளாண் சட்டம் கடந்து வந்த பாதை

விவசாயிகளின் நலனுக்காக, வருவாயை அதிகரிக்க என்று அடைமொழிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மூன்று வேளாண்  சட்டங்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மசோதா நிறைவேற்றம், சட்டம், போராட்டம்.. இன்று ரத்து: வேளாண் சட்டம் கடந்து வந்த பாதை
மசோதா நிறைவேற்றம், சட்டம், போராட்டம்.. இன்று ரத்து: வேளாண் சட்டம் கடந்து வந்த பாதை

கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் நலனுக்காக, வருவாயை அதிகரிக்க என்று அடைமொழிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மூன்று வேளாண்  சட்டங்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, வட இந்திய மாநிலங்களில் விவசாயிகள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் காரணமாக, இன்று இந்த ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சட்டம் என்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முதல் அது கடந்த வந்த பாதையை இங்கே பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டில்..

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையிலான 3 மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது.

‘விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா’, ‘விவசாயிகளுக்கு விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா’, ‘விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா். முன்னதாக மத்திய அரசு கொண்டுவந்திருந்த விவசாயத் துறை சாா்ந்த அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன வேளாண் துறை தொடா்பான மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தன.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்துறை தொடா்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

‘விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா’, ‘விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா’, ‘அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடா்பான 3 மசோதாக்களில் இரண்டு மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் வேளாண் துறை மசோதாக்கள் கடந்துவந்த பாதை, அந்தத் துறையின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். இது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் என்பதோடு, வேளாண் துறையில் முழுமையான மாற்றத்தை உறுதிப்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
 

வரலாற்றுச் சிறப்புமிக்க இரு வேளாண்துறை மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், ‘சுயசாா்பு வேளாண்மைக்கு’ இந்தியா வலுவான அடித்தளமிட்டிருக்கிறது. இது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடா் அா்ப்பணிப்பின் பலனாகும்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய வேளாண் துறையின் வளா்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து புதிய வரலாறு இனி எழுதப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா்.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சியினர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டம் தொடங்கியது..

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஹரியாணா மாநில விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து தற்போது  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் மசோதா: பஞ்சாப் - ஹரியாணா விவசாயிகள் போராட்டம்
வேளாண் மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் - ஹரியாணா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் மசோதா: பிகாரில் ஆர்.ஜே.டி.  கட்சியினர் டிராக்டர் பேரணி
வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில், ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வினி யாதவ் டிராக்கர் இயக்கி ஆதரவு தெரிவித்தார்.

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கும்: ராகுல் குற்றச்சாட்டு

2020ஆம் ஆண்டின் காலச்சுவட்டில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டம்

வெகுண்டெழுந்த விவசாயிகளின் பெரும் போராட்டம்

2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 15 டிகிரி வெப்பநிலைக்கும் குறைவான கடும் குளிரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் குடும்பத்தினரை விட்டுத் தில்லி எல்லைகளில் டிராக்டர்களைக் குடிசைகளாக மாற்றித் தெருவில் விறகு அடுப்புகளை வைத்து தாங்களே சமைத்து உண்டு இரவில் தீமூட்டி குளிர்காய்ந்து இறுதியாக போராட்டக் களத்தில் வெங்காய விளைச்சல் வரை போராட்டம் நீண்டிருக்கிறது. 

விவசாயிகள் போராட்டத்திற்காக அபுதாபி பணியைத் துறக்கும் இளைஞர்


பேச்சுவார்த்தைக்குத் தயார்; திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: விவசாயிகள்
​மத்திய அரசு அர்த்தமற்ற திருத்தங்களைக் கொண்டுவரக் கூடாது என்றும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

'போராட்டத்தை விடுத்து விவசாயிகள் பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்'
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு, பேச்சுவாா்த்தைக்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

விவசாயிகள் போராட்டம்: சுங்கச்சாவடியில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் விவசாயிகள் போராட்டம்
தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து போராட்டத்திலும், மத்திய அரசுக்கு எதிரான பேரணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு தில்லி - உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூா் பகுதியில் கடந்த ஆண்டு முதல் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புகள், பல அடுக்கு இரும்பு முள் வேலிகள் ஆகியவற்றை தில்லி காவல்துறையினா் அப்புறப்படுத்தினா்.

விவசாயிகள் போராடுவதற்கு உரிமை உள்ளது; சாலையை மறித்து அல்ல; உச்சநீதிமன்றம்
‘வழக்கு நிலுவையில் உள்ளபோதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன; ஆனால், தொடா்ந்து சாலையை மறித்து போராடக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் போராடும் விவசாயிகள் மீது காரை மோதும் விடியோ இணையத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகி வைரலாக பரவியது.

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 60 ரயில்களின் சேவை பாதிப்பு; மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை
தில்லி எல்லைகளில் விவசாயிகளின் தொடா் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் ‘சம்யுக்த கிஸான் மோா்ச்சா’ என்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரும் செப்டம்பா் 25-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பாரத பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com