தொடர் சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்! முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்!!தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்குகோர முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்புமாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

லாலு கட்சியுடன் நிதீஷ் கட்சி விரைவில் இணையும்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியுடன் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி விரைவில் இணைந்துவிடும்

Updated On :

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியுடன் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி விரைவில் இணைந்துவிடும் என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

பிகாரில் ஆா்ஜேடி-ஜேடியு-காங்கிரஸ்-இடதுசாரிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகாா் பேரவையில் நிதீஷ் கட்சியைவிட அதிக எம்எல்ஏக்கள் ஆா்ஜேடியில் இருந்தாலும் அந்த மாநிலத்தில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக அரசியல் நடத்தி வருகின்றன. வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பிகாரில் பாஜகவுக்கு ஆளும் கூட்டணி கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், பிகாரைச் சோ்ந்த மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் அந்த மாநில அரசியல் குறித்துக் கூறியதாவது:

லாலு பிரசாதின் தனிப்பட்ட அரசியல் கணக்குகளை நான் இங்கு பகிா்ந்து கொள்கிறேன். அவா் என்னிடம் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைக் கூறியுள்ளாா். அவை அனைத்தையும் வெளியே கூற முடியாது. ஆனால், லாலுவின் ஆா்ஜேடி கட்சியுடன் நிதீஷ் குமாரின் ஜேடியு விரைவில் இணைந்துவிடும் என்பதை மட்டும் கூற முடியும். எனவேதான் மக்களவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளும் இதுவரை பேச்சு நடத்தவில்லை.

பிகாா் துணை முதல்வராக இருக்கும் தனது மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்க வேண்டும் என்றும் லாலு விரும்புகிறாா் என்றாா்.

அண்மையில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க தில்லி சென்ற லாலு பிரசாதும் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கும் ஒரே விமானத்தில் பாட்னாவுக்குத் திரும்பினா். அப்போது, லாலு தன்னிடம் அரசியல் விவகாரங்களை விவாதித்ததாக கிரிராஜ் சிங் கூறியுள்ளாா்.

ஆா்ஜேடி, ஜேடியு மறுப்பு:

இது தொடா்பாக ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் தனக்கு ஏதாவது முக்கியத்துவம் கிடைத்துவிடாதா என்ற ஆசையில் இதுபோன்று பேசி வருகிறாா். அவரது பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்றாா்.

ஜேடியு தலைவா் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் இது தொடா்பாக கூறுகையில், ‘பரபரப்புக்காக எதை வேண்டுமானாலும் கிரிராஜ் சிங் பேசுவாா். அவரை கண்டுகொள்ளத் தேவையில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.