சிறைச்சாலைகளில் ஜாதியப் பாகுபாடு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜாதியப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறைக் கையேடு இருப்பதாக கூறி தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
11 மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகளில் ஜாதியின் அடிப்படையில் கைதிகளுக்கு அறை ஒதுக்கப்படுவதாகவும், பணி வழங்குவதாகவும் கூறி மூத்த வழக்கறிஞர் முரளிதர் சமர்ப்பித்த சிறைக் கையேடுகளை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கவனத்தில் கொண்டது.
சில பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முரளிதர் தெரிவித்தார்.
11 மாநிலங்களின் சிறைக் கையேடுகளையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்குப் பிறகு இதனை விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர் இந்த பொதுநல மனுவைத் தொடர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | அதானி முறைகேடு வழக்கை செபியே விசாரிக்கும்: உச்சநீதிமன்றம்
இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் 11 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை கையாள்வதில் உதவுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 11 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் ஜாதியப் பாகுபாடு காட்டப்படுவதாக மனுவில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



