உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வீட்டின் முன்பாக விளையாடிய சிறுவன் குத்திக் கொலை!

பிகாரில் வீட்டின் முன்பாக விளையாடிய சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

கோப்புப் படம்

Published On :

பிகாரில் வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒருவர், தனது வீட்டின் முன்னால் குழந்தைகளை விளையாடுவதை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பாக, செவ்வாய்க்கிழமையில் சாஹில் குமார் என்ற 3 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.

இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அந்த சிறுவனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், சாஹில் குமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி, சாஹில் குமார் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சிறுவனைக் கொலை செய்தவரைக் கைது செய்த காவல்துறையினர், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுன் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.