முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1.82 கோடிக்கும் அதிகமானோர் பயணம்: வடக்கு ரயில்வே

பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில்1 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செயதுள்ளது குறித்து...

Northern Railway travel of 1.82 crore passengers festivel season

பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1.82 கோடிக்கும் அதிகமானோர் பயணம் - கோப்புப்படம்

Updated On :

நடப்பு ஆண்டு பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1.82 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனம் செய்துள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பூஜா மற்றும் பண்டிகைக் காலங்களில், சுமார் 1.82 கோடி பயணிகள் பயணம் செய்ததாகவும், கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், அதிகமாக சுமார் 10 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணத் திறனை அதிகரித்தல், கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குதல், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் பயணிகளின் தேவையைத் தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றின் மூலம், வடக்கு ரயில்வே தனது முந்தைய ஆண்டு செயல்பாட்டு அளவீடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேயின் தகவல்படி, தீபாவளி மற்றும் சத் பூஜா பண்டிகைக் காலங்களில் மொத்தம் 7,085 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன; இது கடந்த ஆண்டு 4,666 ஆக இருந்தது. அதாவது, பண்டிகைக் கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக நாளொன்றுக்கு சராசரியாக கூடுதலாக 54 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நாள்தோறும் கையாளப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையும் சுமார் 3 லட்சத்து 91 ஆயிரத்திலிருந்து 4 லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது; இதன் மூலம் நாள்தோறும் கூடுதலாக சுமார் 22 ஆயிரத்து 700 பயணிகள் பயணம் செய்ய முடிந்தது. வழக்கமான ரயில் சேவைகள் மூலமாக சுமார் 1 கோடியே 66 லட்சம் பேரும், தேவைக்கேற்ப இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலமாக 12 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

அதிகத் தேவை கொண்ட வழித்தடங்களில் பயணத் திறனை அதிகரிக்க, வடக்கு ரயில்வே இந்த ஆண்டு வழக்கமான ரயில்களுடன் 581 கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 123 பெட்டிகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன; இது இந்த ஆண்டு சுமார் 372 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ரயில்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே அதிகரித்ததுடன், கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் தேவையை உரிய நேரத்தில் கண்காணிப்பட்டதன் மூலம், வடக்கு ரயில்வே மண்டலத்தில் பயணம் செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பகமான போக்குவரத்து வசதியையும், கூடுதல் சௌகரியத்தையும் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Northern Railway has successfully facilitated the travel of nearly 1.82 crore passengers during Puja and the festive season this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.