நாட்டில் புதன்கிழமை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,302 ஆக உள்ளது. இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
தில்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கத்தில், திடீரென கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் படிக்க...
தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்காக செயல்பட்டு வந்த 2.5 கோடி போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நிர்வாகம் முடக்கியுள்ளது.
போலி கணக்குகள் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வோர், மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள மாவட்டங்களின் 84 தொகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள், ஊக்கத்தொகையும் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் நடைபெற்று வருகின்றது. மேலும் படிக்க...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9,090 ஆகவும் சவரன் ரூ. 72,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் படிக்க...
பரந்தூர் விமான நிலையத்துக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்(டிட்கோ) அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
குழந்தைகள் ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு கேட்கும் அழகே அழகு. அதுவும் உணவுபொருளாக இருந்துவிட்டால் தனி அழகுதான். அப்படித்தான், கேரள அங்கன்வாடி மைய சிறுவன் பிரியாணியும், பொரிச்ச கோழியும் கேட்ட விடியோவும் அமைந்திருந்தது. இதையும் படிக்க..
எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன், தற்போது ஆக்ரோஷ தாக்குதலைக் கையிலெடுத்துள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாகவே, கெர்ச் பாலத்தின் தூண்களை, நீருக்கு அடியிலிருந்து வெடிக்கும் வெடிகுண்டுகளைக் கொண்டு வெடிக்க வைத்துத் தகர்த்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 தாள்கள் அதிகம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆர்பிஐ அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ரூ.2,000-ஐப் போல, 500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க..
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். மேலும் படிக்க..
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த நிர்வாகி பவன் கேரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
”இவரின் பெயர் மட்டுமே நரேந்தர், செய்யும் பணி சரண்டர். கோழைத்தனமான வரலாறு கொண்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் நாட்டை வழிநடத்துவது எதிர்காலத்துக்கு ஆபத்தானது.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..
உணவகங்களில் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை. மேலும் படிக்க...
நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மேலும் படிக்க...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ. 25 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றதும், அரசு பதவிகளை ஏற்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவது போன்றவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..
ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 10 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க..
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும்
ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது.
ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுபற்றி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரமான நேரத்தில், பெங்களூரு மக்களுடன் நான் துணை நிற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். உயிரைவிட எந்தக் கொண்டாட்டமும் முக்கியமானதல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உள்பட 11 பேர் பலியாதாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.