
சிறப்புச் செய்திகள்
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
கரோனாவில் இருந்து மீண்ட நியூஸிலாந்து; தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் திறப்பு
கரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் நியூஸிலாந்து நாட்டில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் உலக நாடுகள் பலவும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் நியூஸிலாந்து, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம் நீக்கம்
திருவனந்தபுரத்தில் யாருக்கும் கரோனா தொற்று இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம் நீக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை அம்பத்தூரில் ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா பாதிப்பு
அமெரிக்காவில் உயிரிழப்பு 56 ஆயிரத்தைத் தொட்டது
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்வு
இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1543 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 62 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 934 ஆக உயர்ந்துள்ளது. 6869 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
5 நாள் குழந்தைக்கு கரோனா: 10 வயதுக்குள்பட்டோர் 8 பேர்
தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோரில் 10 வயதுக்குள்பட்ட 8 குழந்தைகளும் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..
சென்னையில் மட்டும் ஒரேநாளில் 103 பேருக்கு கரோனா பாதிப்பு: மாவட்டவாரியான பட்டியல்
சென்னையில் மட்டும் இன்றைக்கு புதிதாக 103 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா: சிகிச்சையில் 123 பேர்
கேரளத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் கரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்
தில்லியில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிஆர்பிஎப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது: மத்திய சுகாதாரத் துறை
கோயம்பேடு பழச்சந்தை, மலர் அங்காடிகள் மாதவரத்திற்கு மாற்றம்
கோயம்பேடு பழச்சந்தை மற்றும் மலர் அங்காடிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும்வரை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு கரோனா தொற்று உறுதி
சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தது. விரிவான செய்திக்கு..
கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கரோனா; 62 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை
கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மும்பையில் 3 காவலர்கள் பலி; 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்
மும்பை: மும்பையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 காவலர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கொள்வாரின்றிக், கடற்பரப்பில் காத்திருக்கும் கச்சா எண்ணெய் கப்பல்கள்
கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொள்வாரில்லாமல், கடற்பரப்பில் கச்சா எண்ணெயுடன் ஏராளமான டேங்கர்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. விரிவான செய்திக்கு..
கோயம்பேடு அருகே முடிதிருத்தும் கடை நடத்தியவருக்கு கரோனா
சென்னை: கோயம்பேடு அருகே ஊரடங்கு உத்தரவை மீறி முடிதிருத்தும் கடையை திறந்து வேலை செய்து வந்த அதன் உரிமையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவிலேயே கரோனா பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கப்படும்: அமைச்சர் தகவல்
கரோனா விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா உறுதி
ஆந்திர மாநிலத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கடந்த 7 நாள்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர்
கடந்த 7 நாள்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
குஜராத்தில் இன்று மட்டும் 247 பேருக்கு கரோனா; பாதிப்பு 3,548 ஆக உயர்வு
குஜராத்தில் இன்று மட்டும் 247 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 522 பேருக்கு கரோனா; 27 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 522 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை கோயம்பேடு சந்தை இடமாற்றம்? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை கோயம்பேடு சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெறும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா
ஆந்திர மாநிலத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்று: மாநிலங்கள் நிலவரம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்றைக்கு புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களின் சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
பிரிட்டனில் மேலும் 329 பேர் பலி: 21 ஆயிரத்தைத் தாண்டியது எண்ணிக்கை
பிரிட்டனில் மேலும் 329 பலியானதையடுத்து அந்த நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
ஐந்து வார தேசிய ஊரடங்கு: எங்கே இருக்கிறோம்?
நாடு முழுவதும கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா: தகனம் - அடக்கத்தைத் தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலத்தை அடக்கம் அல்லது தகனம் செய்வதைத் தடுத்தால் பொது சுகாதாரச் சட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிப்பதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) பிறப்பித்தது.
வெப்பநிலை குறைந்த இடங்களில் கரோனா தீவிரமாகும்: சென்னை ஐஐடி தகவல்
வெப்பநிலை குறைந்த இடங்களில் கரோனா தீவிரமாகப் பரவும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றானது, வெப்பநிலை குறைந்த இடங்களில் தீவிரமாக பரவுமா என்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியா் சச்சின் குந்தே தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் தற்போது விரிவான செய்திக்கு..
இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது
இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இதன்படி 95 கடற்படை வீரர்கள் உட்பட 505 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் 120 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மாவட்டவாரியான பட்டியல்
சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று: 5 பேர் தமிழர்கள்
கேரளத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளான 13 பேரில் 5 பேர் தமிழர்கள் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 331 பேர் பலி
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 331 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,937 ஆக உயர்வு
தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 28,830 ஆக உயர்வு; 886 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 28,380 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் நபரின் உடலை அடக்கம் செய்த இந்து இளைஞர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் ஒருவரை இந்து மதத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் அடக்கம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 33 பேருக்கு கரோனா
தில்லி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும்: பிரதமர் மோடி
கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும் என மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு: தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2021 ஜூலை மாதம் வரை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்புப் பணிக்கு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்குக: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
கரோனா தடுப்புப் பணிக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். விரிவான செய்திக்கு..
மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா நோயாளியே இல்லாத இடமானது வூஹான்
பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில், கரோன தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். விரிவான செய்திக்கு..
எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் 11 பேருக்கு கரோனா: தகவல்
புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 11 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..
கரோனாவில் இருந்து தப்பிக்க உடுத்திய ஆடைகளிலும் கவனம் தேவை
புது தில்லி: கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டு கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை கரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், தெரியாதது, நாம் உடுத்தும் ஆடைகளும் கரோனாவைக் கடத்தும் என்பதுதான். விரிவான செய்திக்கு..
தில்லி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 33 பேருக்கு கரோனா
தில்லி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 511 ஆக உயர்வு: மாநில சுகாதாரத் துறை தகவல்
கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,200ஐ எட்டியது
மாநிலத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...
சென்னை ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 145 ஆனது
சென்னை: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523-ஆக உயா்ந்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 145 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

