சிறப்புச் செய்திகள்
அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
கரோனா: தமிழகத்தின் இன்றைய நிலவரம்
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 1, 2020) 234 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டது, மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரப் பட்டியல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு...
கரோனா தொற்று: உலகச் செய்திகள்
ரஷிய பிரதமருக்கு கரோனா
மாலத்தீவில் கரோனாவுக்கு முதல் பலி
மாலத்தீவில் கரோனா நோய்த் தொற்று காரணமாக முதன்முதலாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மாலத்தீவில் இதுவரை 289 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு.
கரோனா: உலக அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது
கோயம்பேட்டில் கரோனா பாதிப்பு 8-ஆக உயர்வு
கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளி 7 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோயம்பேட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.
28 காவலர்களுக்கு கரோனா: 10,000 தற்காப்பு கவசங்கள் வாங்குகிறது உத்தரப்பிரதேச காவல்துறை
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 28 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் தற்காப்பு கவசங்கள் வாங்குகிறது அந்த மாநில காவல்துறை. விரிவான செய்திக்கு..
கேரளம்: பேட்டி எடுத்த ஊடகவியலாளருக்கு கரோனா: காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்டார்
காசர்கோடு: கேரளத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ஊடகவியலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சில நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி எடுத்த காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்டார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,915 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..
ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 2,500 -ஐத் தாண்டியது
ராஜஸ்தானில் மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,524 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,050; பலி 1,074-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 33,050 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆக்ராவில் புதிதாக மேலும் 29 பேருக்கு கரோனா: பாதிப்பு 433-ஆக உயர்வு
ஆக்ராவில் கரோனா நோய்த்தொற்றால் வியாழக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை29-ஆனது.
இந்தூரில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு 1,485 -ஆக உயர்வு
இந்தூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,485 -ஆக உயர்ந்துள்ளது.
தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா
தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 906-ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் இன்று மட்டும் 22 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,478 பேருக்கு கரோனா நோய்த் தொற்று
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,478 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 1,59,119ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 173 பேர் பலியாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 6,288ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 138 பேருக்கு கரோனா (மாவட்டவாரியாக பட்டியல்)
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,610 ஆக அதிகரிப்பு; 8,373 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,610 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட தற்போதைக்கு வாய்ப்பு இல்லை: மருத்துவ நிபுணர் குழு
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று தொற்றுநோயியல் துறை விஞ்ஞானியும், மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்தவருமான பிரதீப் கவுர் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
வடகிழக்கு மாநிலங்களை அச்சுறுத்தாத கரோனா தொற்று: தற்போதைய நிலவரம்
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது
ரஷியாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7,099 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து 1,06,498ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத் துறை
கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஹரியாணாவில் மேலும் 18 பேருக்கு தொற்று; பாதிப்பு 329 ஆக உயர்வு!
ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...
ஊரடங்கு நீட்டிப்பு?- மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 19 மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரிவான செய்திக்கு..
சென்னையில் அறிகுறிகள் இன்றி 98% பேருக்கு கரோனா தொற்று: ஆணையர் பிரகாஷ் தகவல்
சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு கரோனா; பெரும்பாலானோர் வெளிநாட்டினர்
சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்த ஆண்டு அமோக விளைச்சல்; ஆனால் குப்பையில் கொட்டுகிறோம்: பூ விவசாயி கண்ணீர்
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.
நான்கு நாள் முழு ஊரடங்கு முடிந்து அலைகடலென கடைகளுக்குத் திரண்ட சென்னைவாசிகள்
கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்று பாதித்தவர்களை முகர்ந்து கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி
உலக நாடுகள் பலவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வரும் நிலையில், கரோனா தொற்று பாதித்தவர்களை மோப்ப சக்தியைக் கொண்டு கண்டுபிடிக்கும் பயிற்சியை நாய்களுக்கு அளித்து வருகிறார்கள். விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி
கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை, கோவை, மதுரையில் இன்று முழு ஊரடங்கு முடிவு: நாளை மாலை 5 மணி வரை கடை திறக்க அனுமதி
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் நாளை மாலை 5 மணி வரை செயல்படும் என தமிழக அரசுஅறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திர மாநிலத்தில் புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,332 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா குறித்து 12 முறை எச்சரித்த மத்திய புலனாய்வு அமைப்பு; உதாசீனம் செய்த டிரம்ப்
சென்னை திரு.வி.க. நகரில் ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா தொற்று
சென்னை: சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திரு.வி.க. நகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,332; பலி 1,007-ஆக உயர்வு
புது தில்லி: நமது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,974 -இல் இருந்து 31,332 -ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 937- இல் இருந்து 1007-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,026-இல் இருந்து 7,696-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்தது: சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கரோனா
தமிழகத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மட்டும் 121 பேருக்கு அந்த நோய்த்தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில், அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 103 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மே 13 வரை கூட்டம் கூடத் தடை
சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், மே 13-ஆம் தேதி வரை கூட்டம் கூடத் தடை விதிக்கப்படுவதாக காவல் ஆணையா் ஏகே விஸ்வநாதன் அறிவித்துள்ளாா்.
சென்னைக்கு 10 ஆயிரம் பிசிஆா் உபகரணம்
சென்னையில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தும் வகையில் டாடா குழுமம் ரூ. 2 கோடி மதிப்பில் 10 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் உபகரணங்களை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது.
சென்னையில் மேலும் 94 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியான பட்டியல்
சென்னையில் மட்டும் இன்றைக்கு (புதன்கிழமை) மேலும் 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களக்கு அனுப்ப ஏற்பாடு: மத்திய அரசு
புது தில்லி: வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,787; பலி 1,008 ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,332-இல் இருந்து 31,787 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,007 -இல் இருந்து 1,008 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
அரசு ஊழியர்கள் 'ஆரோக்ய சேது' செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம்: மத்திய அரசு
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 'ஆரோக்ய சேது' செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஜூலை 31 வரை ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்: மத்திய அரசு
புது தில்லி: கரொனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 31 வரை (நிறுவனம் அனுமதித்தால்) தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை: காவல்துறை அறிவிப்பு
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு: அமரீந்தர் சிங்
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தில்லியில் ஊடகவியலாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா உறுதி: கேஜரிவால்
தில்லியில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த்கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவரா? கரோனா முடியும் வரை கண்ணாடிக்கு மாறுவது நல்லது!
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கரோனா தொற்று குறித்த புதுப் புது தகவல்கள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன. விரிவான செய்திக்கு..
அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சிப் பகுதியில் அத்தியாவசியத் தேவைக்காக இயங்கும் அரசு, தனியார் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
'கிம் உயிருடன் இருக்கிறார், நிற்கவோ, நடக்கவோ முடியாது'
வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் உயிருடன் இருப்பதாகவும் ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக அவரால் நிற்கவோ, நடக்கவோ இயலாது என்றும் வட கொரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் உயர் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 2,383 ஆக அதிகரித்தது!
ராஜஸ்தான் இன்று மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,383 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
10, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: சிபிஎஸ்இ தகவல்
ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

