கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு 

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20  போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜூலை 2022, 12:50 pm

DIN

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20  போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2014க்குப் பிறகு நியூசிலாந்து அணி மே.இ.தீவுகளிடம் சென்று விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த தொடரில் முக்கியமான மூத்த வீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டிரெண்ட் போல்ட் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இவர்களுடன் டெவோன் கான்வேவும் களமிறங்க உள்ளார். 

நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட், “நீண்ட வருடத்திற்குப் பிறகு ஒரு இடத்தில் விளையாடப்போகும் போது எப்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். கடந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் விளையாடியப் பிறகு தற்போதுதான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விலையாடுகிறார்கள். அதனால் இந்த தொடர் முக்கியமானதாக அமையும். மேலும் சில புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார். 

15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி: 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கெல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்டின் கப்டில், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.