இனி தத்கல், ஆர்ஏசி, கட்டண மாற்றம் இல்லை! புதிய வந்தே பாரத் சேவை பற்றிய முழு விவரம்கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை! நிர்மல் குமார்பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் (எக்ஸ்)

Updated On :

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.

127 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதலில் விளையாடிய ஜிம்பாப்பே அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 61 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் காஸன்ஃபர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது மற்றும் அஸ்மதுல்லா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான செதிக்குல்லா அடல் அதிகபட்சமாக 50 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அப்துல் மாலிக் 29 ரன்களும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. காஸன்ஃபர் ஆட்ட நாயகனாகவும், செதிக்குல்லா அடல் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.