இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நம்பர் 18 ஜெர்சிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வளிக்குமா பிசிசிஐ?

விராட் கோலியின் நம்பர் 18 ஜெர்சிக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து பிசிசிஐ ஓய்வளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

virat kohli

விராட் கோலி (கோப்புப் படம்)

Published On :3 ஜூன் 2025, 4:28 pm IST

விராட் கோலியின் நம்பர் 18 ஜெர்சிக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து பிசிசிஐ ஓய்வளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி திடீரென ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உலகுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நம்பர் 18 ஜெர்சிக்கு ஓய்வளிக்கப்படுமா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக, இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் நம்பர் 18 பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாடியது விராட் கோலியின் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

இந்திய அணிக்காக கடந்த 14 ஆண்டுகளாக விராட் கோலி நம்பர் 18 ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளார். அவர் அணிக்காக பல்வேறு சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார். அதனால், அவரது ஜெர்சி நம்பரில் வேறு ஒரு வீரரை விளையாட அனுமதிக்கக் கூடாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

முகேஷ் குமார் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. அப்படியே அவர் மாற்று வீரராக இடம்பெற்றாலும், அவரது ஜெர்சி நம்பர் 49-ஐ அணிந்தே விளையாட வேண்டும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமார் நம்பர் 18 பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார். இந்தியா ஏ அணிக்காக விளையாடும்போது, வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயர் இடம்பெறாது என்பதால், வீரர்கள் இந்த நம்பர் பொறித்த ஜெர்சி அணிந்துதான் விளையாட வேண்டும் என்று எதுவும் இல்லை. அவர்கள் பொதுவாக எந்த ஒரு எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியையும் அணிந்து விளையாடலாம். சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஜெர்சி நம்பர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது என்றார்.

இதற்கு முன்பாக, இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இலங்கைக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடியபோது, ஷர்துல் தாக்குர் நம்பர் 10 பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடினார். சச்சின் டெண்டுல்கரின் எண் பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடிதால், ரசிகர்கள் அவர் மீது கோபமடைந்தனர். மேலும், நம்பர் 10 ஜெர்சியை அணிந்து அவர் விளையாடக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரின் ஜெர்சி எண்களும் ஓய்வு பெற்றதாக பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டு, சர்வதேசப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறும் எந்த ஒரு வீரருக்கும் இந்த இரண்டு எண்களும் வழங்கப்படுவதில்லை.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக முகேஷ் குமார் நம்பர் 18 பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடியது விராட் கோலியின் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் ஜெர்சி எண் 18-ஐ டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றதாக பிசிசிஐ அறிவிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விராட் கோலியின் நம்பர் 18 ஜெர்சியை ஓய்வு பெற்றதாக பிசிசிஐ அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.