காமன்வெல்த் நீளம் தாண்டுதல்: இந்திய வீரருக்கு வெள்ளிப் பதக்கம்
காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது திறமையை அழுத்தமாக நிரூபித்துள்ளார்.


காமன்வெல்த் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீ. நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2018 காமன்வெல்த் போட்டிகளில் காயம் காரணமாக ஸ்ரீசங்கர் இடம்பெறவில்லை. ஜப்பான் ஒலிம்பிக்ஸில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது திறமையை அழுத்தமாக நிரூபித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...