இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தீபக் சஹாருக்குக் காயம்?: புதிய வீரரின் தேர்வால் நேர்ந்த குழப்பம்!

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சஹாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக...

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 12:14 pm

DIN

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சஹாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை பிசிசிஐ தரப்பு மறுத்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியினர் அனைவரும் துபைக்குச் சென்று பயிற்சியெடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வாகியுள்ளார். 

ஆசியக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளார். தீபக் சஹாருக்குக் காயம் ஏற்பட்டதால் தான் இந்த ஏற்பாடு எனச் செய்திகள் வெளியாகின. ஆனால் பிசிசிஐ தரப்பு இத்தகவலை மறுத்துள்ளது. குல்தீப் சென், வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத்தான் தேர்வாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபக் சஹாருக்குக் காயம் எதுவும் இல்லை, அவர் மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் 25 வயது குல்தீப் சென்னை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 7 ஆட்டங்களில் விளையாடிய குல்தீப் சென், 8 விக்கெட்டுகளை எடுத்தார். எகானமி - 9.42.

குல்தீப் சென்

குல்தீப் சென்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.