முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சதம் விளாசிய விராட் கோலி: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2023, 4:28 pm

DIN

வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையின் இன்றயைப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்குர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில்  களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடியது. இருப்பினும், ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7  பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். ஷுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 

அதன்பின், ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய விராட் கோலி சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். இந்த சிக்ஸருடன் விராட் கோலி தனது 48-வது சதத்தை பூர்த்தி செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 97  பந்துகளில் 103 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இறுதியில், 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தனது 4-வது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.