கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ரோஹித் சர்மா ஊக்கமளிக்கிறார்; டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் பேச்சு!

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய சஹில் சௌகான், ரோஹித் சர்மா தனக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சஹில் சௌகான் - படம் | ஐசிசி

Published On :

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய சஹில் சௌகான், இந்திய அணியின் கேப்டன்ரோஹித் சர்மா தனக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்டோனிய வீரரான சஹில் சௌகான், அண்மையில் டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். அவர் 27 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு ஊக்கமளிப்பதாக சஹில் சௌகான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா (கோப்புப்படம்)

ரோஹித் சர்மா (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா விளையாடுவதைப் பார்த்ததிலிருந்தே நான் அவருடைய மிகப் பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். அவர் மிகச் சிறந்த வீரர். அவர் பேட்டிங் செய்யும்போது பதற்றமடைய மாட்டார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவருடைய ஹூக் ஷாட்டுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

சைப்ரஸுக்கு எதிரான போட்டியில் சஹில் சௌகான் 41 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.