அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்

தமிழக பட்ஜெட்டில் சமூகநீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக திருமாவளவன் கருத்து...

News image

திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 7:05 pm IST

கலைஞர் கனவுத் திட்டம் தற்போது வெற்றி வீடு திட்டமாக மாற்றப்பட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (ஆக. 5) தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் 2026 குறித்து அரியலூரில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:

''பட்ஜெட் குறித்து முழுமையாக படித்த பிறகுதான் கருத்து கூற முடியும். எனினும், ஒருசில அறிவிப்புகள் பாராட்டத்தக்கவையாக இருக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் வசதியான சைக்கிள் வழங்க அரசு முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

கலைஞர் கனவுத் திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த திட்டத்தை வெற்றி வீடு திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மானியம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தவெக அரசு, வீடு கட்டும் மதிப்பை உயர்த்தியிருப்பதை பாராட்டுகிறோம்.

சமூகநீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம், பண்டிதர் அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

அயல்நாடுகளுக்குச் சென்று படிப்பவர்களுக்கான உதவித்தொகை திட்டம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நீதித்துறையை சுதந்திரமாக இயங்கச் செய்வதற்கும், முழுமையாக செலவிடுவதற்குமான வாய்ப்பையும் இந்த அரசு வழங்கியுள்ளது. பட்ஜெட்டிலும் அது எதிரொலித்துள்ளது'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.

Budget 2026 Kalaignar's dream scheme has transformed into the Vetri Veedu scheme Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.