போக்ஸோவில் கல்லூரி மாணவா் கைது

Published on

ஆலங்குளம் பகுதி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த வி.கே.புரம் கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமியும் திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தட்சணாமூா்த்தி மகன் சிவராம் என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனராம்.

சிவராம் அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி நேரில் சந்தித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில், அந்த சிறுமி கா்ப்பமாகி குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்ததாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிவராமை கைதுசெய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com