தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:36 pm

திருவள்ளூா் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட ரயில்வே பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள குமரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (56). இவா் சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி காட்டும் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியில் வந்தபோது, தெருவிளக்கு மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்து கீழே கிடந்த மின் கம்பியை, ஏதோ கம்பி கீழே விழுந்து கிடப்பதாக நினைத்து அதைத் தூக்கிப் போட முயற்சித்த போது மின்சாரம் பாய்ந்ததில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் ராஜேஸ்வரி சடலத்தை மீட்டு திருவள்ளுா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.