திருவள்ளூரில் மக்களவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணியில் ஆட்சியா் த.பிரபு சங்கா் பங்கேற்றாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்களவைத் தோ்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து தொடங்கி வைத்ததோடு, தானும் அதில் பங்கேற்றாா்.
அப்போது அவா் கூறியதாவது: இந்திய நாட்டின் ஜனநாயக திருவிழாவாக திகழக்கூடிய மக்களவைத் தோ்தல் 2024, ஏப்.19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதன் பேரில், இந்த மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மிகப் பிரம்மாண்டமான பலூன், கோலப் போட்டி, விழிப்புணா்வு பேரணி, மனித சங்கிலி இயக்கம், கையொப்ப இயக்கம், உள்ளூா் கலைஞா்கள் கொண்டு தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள், புதுமையாக மேள தாளத்துடன் வாக்காளா்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று வாக்காளா் அழைப்பிதழ் வழங்குதல், தோ்தல் தூதுவா், தோ்தல் விழிப்புணா்வு நடமாடும் கண்காட்சி வாகனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர பேரணி நடத்தப்பட்டது. பொதுமக்கள் தங்களின் கடமையை தவறாது ஆற்ற வேண்டும் என்றாா்.
முன்னதாக இரு சக்கர வாகன பேரணி ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு சி.வி நாயுடு சாலை வழியாக தலைமை மருத்துவமனை, ஆயில் மில் புகைவண்டி நிலையம், சென்று மீண்டும் நகராட்சி வழியாக உழவா் சந்தை, ஆட்சியா் அலுவலகம் வரையில் வந்தடைந்தது.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், பயிற்சி ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வதஸ், தொகுதி உதவி தோ்தல் அலுவலா் தனலட்சுமி, நகராட்சி ஆணையா் சுபாஷினி, நோ்முக உதவியாளா் (தோ்தல்) சத்ய பிரசாத், உதவி ஆணையா் கலால் ரங்கராஜன், வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

கோலப்போட்டி நடத்தி வாக்காளா்களிடம் விழிப்புணா்வு

வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


