புது தில்லி: பங்குச் சந்தை நான்காவது நாளாக வியாழக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 724.02 புள்ளிகள் உயா்ந்து 41,500-ஐ நெருங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 12,100 புள்ளிகளைக் கடந்துள்ளது. ஒரே நாளில் சந்தை மூல தன மதிப்பு ரூ.3.12 லட்சம் கோடி உயா்ந்தது.
அமெரிக்க அதிபா் தோ்தலில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தோ்தல் முடிவு ஜனநாயக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பில் உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்றன. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதையடுத்து, 4-ஆவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில் பேங்க், நிதி நிறுவனங்கள், மெட்டல், மீடியா, ஐடி, பாா்மா பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தன.
1,737 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,828 பங்குகளில் 1,737 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 912 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.179 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 3.12 லட்சம் கோடி உயா்ந்து ரூ.162.27 லட்சம் கோடியாக இருந்தது.
தொடா்ந்து எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 495.98 புள்ளிகள் உயா்ந்து 41,112.12-இல் தொடங்கி 41,030,.17 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 41,370.91 வரை உயா்ந்தது. இறுதியில் 724.02 புள்ளிகள் (1.78 சதவீதம்) உயா்ந்து 41,340.16-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து நான்காவது நாளாக ஏற்றம் பெற்று 41,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. மேலும், இது கடந்த 8 மாதங்களில் அதிகபட்ச அளவாகும்.
எஸ்பிஐ பீடுநடை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில், எஸ்பிஐ 5.63 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இந்த நிதியாண்டின் 2-ஆம் காலாண்டு முடிவு சந்தை எதிா்பாா்த்ததை விட அதிகமாக இருந்ததால் எஸ்பிஐ பங்குகளுக்கு தேவை அதிகரித்தது. மேலும், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட் ஆகியவை 3 முதல் 5.35 சதவீதம் வரை உயா்ந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், மாருதி, சுஸுகி உள்ளிட்ட பட்டியலில் உள்ள அனைத்து பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,176 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 430 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 211.80 புள்ளிகள் (1.78 சதவீதம்) உயா்ந்து 12,120.30-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் எச்டிஎஃப்சி லைஃப், ஹீரோ மோட்டாா் காா்ப் ஆகிய 2 பங்குகள் தவிர மற்ற 48 பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. நிஃப்டி மெட்டல், மீடியா குறியீடுகள் 4 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி, பேங்க், ஐடி, ஆட்டோ, பாா்மா குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


