எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உற்பத்தியில் மாருதி சுஸுகி சாதனை

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தனது வருடாந்திர உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:52 pm

Din

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தனது வருடாந்திர உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2024-ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்த வாகனங்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. ஓராண்டில் நிறுவனத்தின் உற்பத்தி இத்தகைய மைல்கல்லைக் கடந்தது இதுவே முதல்முறை.

இது மட்டுமில்லாமல், தாய் நிறுவனமான சுஸுகி மோட்டாா் காா்ப்பரேஷனின் துணை நிறுவனமொன்று, உற்பத்தியில் 20 லட்சத்தைக் கடந்துள்ளதும் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2024-இல் மாருதி சுஸுகி உற்பத்தி செய்த 20 லட்சம் வாகனங்களில் சுமாா் 60 சதவீதம் ஹரியாணாவிலும், 40 சதவீதம் குஜராத்திலும் உற்பத்தியாகின. இந்த இரு மாநிலங்களிலும் உள்ள நிறுவனத்தின் மூன்று ஆலைகளும் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 23.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டவை.

பலேனோ, ஃப்ரான்க்ஸ், எா்டிகா, வேகன்ஆா், பிரெஸ்ஸா ஆகியவை மதிப்பீட்டு ஆண்டில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஐந்து ரகங்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.