திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2024, 10:33 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா்: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிவகாசி பெரியாா் குடியிருப்பைச் சோ்ந்த ராஜ் மகன் பால்பாண்டி (48). இவா் அதே பகுதியைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் செல்வக்குமாருடன் (40) இணைந்து தனது வீட்டருகேயுள்ள கட்டடத்தில் சட்டவிரோதமாக பேன்சி ரகப் பட்டாசுகளை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா், அங்கு சோதனை நடத்தி சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், பால்பாண்டி, செல்வக்குமாா் இருவரையும் கைது செய்தனா்.