தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

தொகைகளும் விரியும்... பிழையற்ற தமிழ் அறிவோம்! - 25

காலம், தமிழர் கணக்கு - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...

News image
Updated On :2 நவம்பர் 2024, 12:02 pm IST

இரவு மணி எட்டு: தன் பேச்சைத் தொடங்கிய பேச்சாளர் 'இந்த இனிய மாலை நேரத்தில்' என்று தொடங்கினார். உடனே, இல்லை மாலை நேரம் போய்விட்டது. இப்போது இரவாயிற்று என மாற்றினார். உண்மையில் பத்து மணி வரை மாலை என்பதுதான் தமிழர் வகுத்துள்ள கணக்கு.

காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள் (எல்- கதிரவன், படுதல்- சாயுதல்).

இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓராண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்).

'சமுதாயச் சிக்கல்களும் சித்தர் ஆய்வுத் தீர்வைகளும்' எனும் தலைப்பில் ஒரு நூல் நமது மதிப்புரைக்காக அனுப்பப்பட்டு வந்திருந்தது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு நம்மைத் திகைக்க வைத்தது. நீளமாக இருப்பதால் அன்று. ஆய்வு தீர்வை எனும் சொல் கண்டு மலைத்தோம். ஆயத் தீர்வை நாம் அறிந்ததுண்டு. இஃது என்ன ஆய்வுத் தீர்வை? ஆய்வுத் தீர்வுகள் எனும் சொல்லைத் தீர்வைகள் (நிலவரி) ஆக்கியமை எத்துணை பெரிய தவறு!

நூல்கள் பதிப்பாளர் கூட்டத்தில் உரையாற்றிய பொது நூலகத் துறை இயக்குநரை, பொதுநலத் துறை இயக்குநர் என்று ஒரு நாளிதழ் அச்சிட்டிருந்தது. சில எழுத்துகள் மாறி அச்சுப் பிழை நேர்ந்திருக்கலாம். ஆனால் எவ்வளவு பெரிய பொருள் வேறுபாடு? நூலகத் துறையை நலத்துறையாக ஆக்கிவிட்டதே! ஆங்கிலப் பத்திரிகைகளில் இப்படி வந்திருந்தால் ஆசிரியர்க்குக் கடிதம் எழுதி கிழிகிழி என்று கிழித்திருக்கமாட்டார்களா?

பத்து ஆண்டுகள் முன் ஒரு வார ஏட்டில் ஒரு கவிதை படித்தேன். அதில் 'அக்கினிப் பிரவேசம் அயோத்தியில் நடந்தது' என்று ஒரு வரி. இராமன்  இராவணனைக் கொன்ற பின், சீதையை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பும் முன்பு, சீதை அப்பழுக்கற்றவள் எனக் காட்டத் தீக்குளிக்கச் சொன்னான். அந்த அக்கினிப் பிரவேசம் இலங்கையில் நடைபெற்றது. இவரோ அயோத்தியில் என்று எழுதியுள்ளார். அரைகுறையாய் அறிந்த செய்திகொண்டு மோனை அழகுக்காக இப்படி எழுதினாரோ!

தஞ்சை மாவட்டத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றில், 'பஸ் நின்ற பின் இரங்கவும்' என்று எழுதியிருக்கிறார்கள். 'ஐயோ இந்த ஓட்டைப் பேருந்தில் பயணம் செய்தோமே' என்று தன்னிரக்கம் கொள்ள வேண்டியதுதான்.

இதுமட்டுமன்று: 'டிரைவருக்கு இடையூராகப் பேசாதீர்' என்று ஓர் அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது.

பட்டுக்கோட்டையில் ஏறினால் தஞ்சாவூரில்தான் இறங்க வேண்டும் போலும். இடையில் உள்ள ஊர்கள் பற்றிப் பேசக் கூடாதாம். தமிழ் எப்படி விளையாடுகிறது!

தொகையும் விரியும்

'வேற்றுமை உருபு விரிந்து வரும்போது' என்று எழுதியுள்ளீர்கள்? விரிந்து வருதல் என்றால் என்ன என ஓர் அன்பர் வினவினார். தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்) விரி எனில் விரிந்து வருதல் (வெளிப்படையாக வருதல்) மறைந்தும் வெளிப்படையாகவும் வரும் என்றால் விளங்கவில்லையே! எவை அப்படி வரும்? வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை என ஐந்து. இவற்றின் உருவுகள் மறைந்துவந்தால், வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்பர் இலக்கண நூலார்.

'வீடு சென்றான்' எனில் வீட்டிற்குச் சென்றான் எனப் பொருள். இதில் 'கு' எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம். வீடு சென்றான் என்பதை வீட்டிற்குச் சென்றான் என எழுதும்போது  இது வேற்றுமை விளி.

எரிந்த, எரிகின்ற, எரியும் தழல் எரிதழல் - இது வினைத் தொகை. நேற்றும் எரிந்த தழல்; இன்று எரிகின்ற தழல், நாளை எரியும் தழல் என முக்காலமும் உணர்த்தும். எரிகின்ற தழலில் எண்ணெய் ஊற்றினாற் போல - எரிகின்ற என்பதில் காலம் வெளிப்படை. இது தொகையாகாது.

செந்தாமரை -  இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம்.

கபில பரணர் வந்தார். இது கபிலரும் பரணரும் வந்தார்கள் என்று விரியும். உம் எனும் இடைச் சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை. 'உம்' வெளிப்பட்டு நின்றால் அது விரி.

புலிப் பாய்ச்சல் புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள் தரும். போன்ற எனும் உவமை உரு, மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை. தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.