பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

3 அணு உலைகளை மூடும் ஜெர்மனி: புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற தீவிரம்

புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறும் முயற்சியாக ஜெர்மனி மேலும் 3 அணு உலைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ளது.

3 அணு உலைகளை மூடும் ஜெர்மனி: புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற தீவிரம்

Published On :

புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறும் முயற்சியாக ஜெர்மனி மேலும் 3 அணு உலைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நிலக்கரி உற்பத்தி தொடங்கி அணு உலைகளை மூடுவது வரை பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜெர்மனியில் எஞ்சியுள்ள 6 அணு உலைகளில் மூன்றை மூட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலை வெடித்தது. அதனைத் தொடர்ந்து அணு உலைகளை படிப்படியாக மூடும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் ப்ரோக்டார்ஃப், கிராண்ட், கண்ட்ரெமிங்கென் உள்ளிட்ட மூன்று அணு உலைகளும் மூடப்படுவதாக அறிவித்துள்ள ஜெர்மனி எஞ்சிய 3 அணு உலைகளும் 2022ஆம் ஆண்டுக்குள் மூடப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள 6 அணு உலைகளும் அந்நாட்டின் மொத்த ஆற்றல் தேவையில் 12 சதவிகிதத்தை நிறைவு செய்கின்றன. இவற்றுக்கு மத்தியில் 2030ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனி மரபுசாரா ஆற்றல் மூலங்களின் மூலம் 80 சதவிகித ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.