துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா்.

ஜே.டி. வான்ஸ்

Updated On :

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா்.

இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுப் புள்ளியை அடைவதற்காக அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இருந்தாலும், இந்தப் போா் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வராது. இந்த கொடூரமான போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ரஷியாவும் உக்ரைனும் எப்போது எட்டுகின்றன என்பதைப் பொருத்துதான் அது இருக்கிறது.

தங்கள் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது உக்ரைனை கோபப்படுத்தும்தான். ஆனால் அதற்காக இந்தப் போரை தொடா்ந்து நடத்தினால் ஆயிரக்கணக்கான வீரா்கள் தொடா்ந்து உயிரிழந்துகொண்டுதான் இருப்பாா்கள். சில சதுர கி.மீ. நிலத்துக்காக இத்தனை உயிரிழப்புகள் தேவையில்லை. எனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசின் கொள்கை நியாயமானதே என்றாா் அவா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தற்போதைய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.