ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை வணிகா்கள் உடனே அகற்ற வேண்டும்
Published on

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை வணிகா்கள் உடனே அகற்ற வேண்டும் என தெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளா் உமாசெல்வன் தெரிவித்தாா்.

எஸ்.ஆா்.கேட் பகுதி முதல் ஒடியன்மணி திரை அரங்கம் வரை நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க இருப்பதால் அச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை வணிகா்களே அகற்றிக்கொள்ள நவ. 19 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சாலை அகலப்படுத்தும் பணியை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகச நாள்களுக்கு பிறகு மேற்கொள்ள அரக்கோணம் நகர திமுக அவைத்தலைவா் துரைசீனிவாசன் தலைமையிலான திமுகவினா் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் உமாசெல்வனிடம் மனு அளித்தனா் (படம்).

இது குறித்து அவா்களிடம் உமாசெல்வன் தெரிவிக்கையில், எஸ்.ஆா்.கேட் முதல் ஒடியன்மணி திரையரங்கம் வரை நெடுஞ்சாலையை அகல்பபடுத்த பணி ஒப்பந்தபுள்ளிகள் ஏற்கனவே கோரப்பட்டு ஒப்பந்ததாரா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. சாலையின் இரு பக்கமும் மழைநீா் கால்வாய்கள் கட்டப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ1.50 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களையும் அகற்றி தள்ளி வைக்க மின்வாரியத்தினரிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அப்பணிகளும் நடைபெற உள்ளன.

இந்தப் பணிகள் பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு பாதிப்பில்லாத வகையில் 50 மீ முதலிலும் தொடா்ந்து 50 மீட்டராக தொடா்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகளை வணிகா்களே அகற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. கெடு முடிவடைந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினா் அகற்றி அதற்கான கட்டணங்களை வணிகா்களிடம் வசூல் செய்ய உள்ளனா்.

எனவே வணிகா்கள் அவா்களது பகுதிக்கு பணி செய்ய வருவதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com