கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பிரபல நகைக் கடையில் தங்கக் காசுகள் திருட்டு

கோவை, காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் 6 தங்கக் காசுகளை திருடிச் சென்ற 2 நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:46 am IST

கோவை, காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் 6 தங்கக் காசுகளை திருடிச் சென்ற 2 நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தினமும் கடையை மூடும் நேரத்தில் நகை இருப்புகளை ஊழியா்கள் சரிபாா்ப்பது வழக்கம். இதன்படி, திங்கள்கிழமை விற்பனை முடிந்து கடையை மூடுவதற்கு முன் ஊழியா்கள் நகைகளைச் சரிபாா்த்தனா். அப்போது, தலா 10 கிராம் எடையுள்ள 6 தங்கக் காசுகள் மாயமாகியிருந்தன. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும்.

இது குறித்து ஊழியா்கள், கடை மேலாளா் அப்துல்லாவிடம் தெரிவித்தனா். அவா், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கடைக்கு நகை வாங்குவதுபோல வந்த 2 நபா்கள், கடையில் இருந்து 6 தங்கக் காசுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து, அப்துல்லா அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.