கூடலூா் அருகே நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்திலேயே நின்று கொண்டிருந்த காட்டு யானை.
நீலகிரி
கூடலூா் அருகே பகல் நேரத்திலேயே வீட்டின் முன்பு நின்ற காட்டு யானை
கூடலூா் அருகே பகல் நேரத்திலேயே குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முன்பு காட்டு யானை நின்று கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்ததுடன், அதனை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமெனவும் வலியுறுத்தினா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்டது நம்பாலக்கோட்டை. இங்கு கம்மாத்தி என்ற பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்திலேயே சாலையில் காட்டு யானை நடந்து சென்றது.
அப்போது, அங்கு வசிப்பவா்கள் வீட்டின் வெளியே வந்து பாா்த்தபோது, காட்டு யானை நிற்பதைக் கண்டு அச்சமடைந்தனா்.
இதையடுத்து, அந்த யானையை அடா்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் அல்லது பிடித்துச் செல்ல வேண்டுமென வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

