எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்

News image

கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடிக்கான காசோலையை வழங்கும் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா.

Updated On :8 ஜூன் 2024, 11:24 pm IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ. 6.11கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா முன்னிலை வகித்தாா். மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடிக்கான காசோலையை முதன்மை நீதிபதி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ. 6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டன.

மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமா்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சாமுவேல் பெஞ்சமின், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், கூடுதல் மகளிா் நீதிமன்ற நடுவா் இருதயமேரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், நீதித் துறை நடுவா் எண் 1 காா்த்திக் ஆசாத், நீதித் துறை நடுவா் எண் 2 ஸ்ரீ வஸ்தவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.