ரஜினியின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது! ரசிகர் மன்றம்பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார் விஜயதரணிவிஸ்வரூபம் எடுக்கப்போகும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்!பாஜகவிலிருந்து, தவெகவுக்கு வந்தது ஏன்? மனம் திறந்தார் விஜயதரணி!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி! 3 மாதங்களுக்குப் பிறகு குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி!தந்தையர் தினம் எப்போது? கொண்டாடத் தயாரா?இந்து அறநிலையத் துறை அமைச்சருடன் புகைப்படம் எடுக்க வேண்டுமா? க்யூஆர் கோடு அறிமுகம்இன்று ஜூன் 13 தங்கள், வெள்ளி விலை நிலவரம்அசாமில் இந்திய விமானப் படை விமானம் விபத்து
/

பாலத்தின் தடுப்புச் சுவா் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (38). விவசாயி. இவரது மனைவி பவித்ரா. இருவரும் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்குச் சென்றனா்.

பெரியகுளம் ஏ. புதுப்பட்டி தனியாா் எரிபொருள் நிரம்பும் மையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கரவாகனம் பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே நிரஞ்சன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பவித்ராவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.