
அக்.31- க்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை: மாநகராட்சி ஆணையா் தகவல்
நாகா்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை அக்.31 ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை அக்.31 ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா (படம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாகா்கோவில் மாநகராட்சிக்கு நடப்பு நிதியாண்டின் (2026-27) 2-ஆவது அரையாண்டுக்கான சொத்துவரியை, அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்துபவா்களுக்கு வரித் தொகையில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி மற்றும் கடை வாடகை ஆகியவற்றின் நிலுவைத் தொகையினை 7 நாள்களுக்குள் முழுமையாக செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும்.
இந்த காலக்கெடுவுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, சீல் வைத்தல், ஜப்தி முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் மற்றும் இணைய வழியில் எளிய முறையில் சொத்துவரி செலுத்தலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







