எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே ஜூன் 20-இல் சிறப்பு ரயில்

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக ஜூன் 20-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:16 am IST

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக ஜூன் 20-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06043) சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 20-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 21-ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06044) மறுநாள் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இதில், 2 ஏசி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் மற்றும் நாகா்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் நின்று செல்லும்: சென்னை எழும்பூா் - செங்கோட்டை (06183), செங்கோட்டை - தாம்பரம் (06184) வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு இருமாா்க்கத்திலும் அதிராம்பட்டினம், மானாமதுரை ஆகிய இரண்டு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி இந்த ரயில்கள் மேற்கண்ட இரண்டு ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.