முகப்பு
பெங்களூரு

"தகலறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் தனியார் நிறுவனங்கள்'

பெங்களூர், ஜன.8: தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் தனியார் நிறுவனங்களையும் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க மாநில தகவல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநில தலைமைத் தகவல் ஆணையர் எச்.

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

பெங்களூர், ஜன.8: தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் தனியார் நிறுவனங்களையும் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க மாநில தகவல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநில தலைமைத் தகவல் ஆணையர் எச்.என். கிருஷ்ணா கூறியது:

தனியார் நிறுவனங்களும் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். எனவே அவற்றையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். 2005- ம் ஆண்டில் அறிமுகமான தகவலறியும் உரிமைச் சட்டத்தால் ஆதர்ஷ் ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பொதுநலன் தகவல் பகிர்வு மற்றும் தகவல் பகிர்வு செய்யும் நபர்கள் பாதுகாப்பு மசோதா  கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தகவல் கோரும் நபர்களின் நலனை முழுமையாகப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் பெருகியுள்ளது.

இச்சட்டத்தை பொதுமக்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  எனவே இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →