பெங்களூரு

பெண்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி: அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா

தினமணி

கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா தெரிவித்தார்.
 பெங்களூரு எலஹங்கா ஒன்றியம், சிங்கநாயகனஹள்ளியில் வியாழக்கிழமை மண்டல போக்குவரத்து அலுவலக கட்டட திறப்பு விழாவில் அவர் பேசியது:
 பெண்கள் காவல் துறை உள்பட பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை ஆண்களுக்கு நிகராக காட்டி வருகின்றனர். போக்குவரத்து துறையிலும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து, ஓட்டுநர்களாகப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
 தேசிய அளவில் சாலை பாதுகாப்பில் கர்நாடகம் 4-ஆவது இடத்தில் உள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். மாநில அளவில் 63 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இதில் 40 அலுவலகங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
 பெங்களூரில் 11 மண்டல அலுவலகங்களில், 5 அலுவலகங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதில் தற்போது எலஹங்கா ஒன்றியம் சிங்கநாயகனஹள்ளி அலுவலகமும் சேர்ந்துள்ளது. மாநில அளவில் 5 லட்சம் டிராக்டர்கள் உள்ளன.
 இதனை இயக்குவதற்கு 2 லட்சம் பேர் உரிமம் பெற்றுள்ளனர். விவசாயி சாரதி திட்டத்தில் உரிமம் பெறாத அனைவருக்கும் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படும். மாசு அதிகரித்துவருவதில் தில்லியைத் தொடர்ந்து கர்நாடகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. எனவே, விரைவில் மாதத்தின் 2-ஆவது வார ஞாயிற்றுக்கிழமையை போக்குவரத்து இல்லா தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களும், போக்குவரத்தில் தொடர்புடைய சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாத், மேலவை உறுப்பினர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து
 கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT